Friday, August 8, 2025

கங்கை கொண்ட சோழபுரம்!


பிரயாணம்! சாகசம்! வரலாறு! என்பதன் அடிப்படையில் இயங்கும் யு டியூப் சானல் கர்ணனின் 'Tamil Navigation' சானல் ( https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM ).  தமிழர்தம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல காணொளிகளை உள்ளடக்கிய சானல்.  இக்காணொளியில் முதலாம் இராசேந்திரன் சோழன் கட்டிய 'கங்கை கொண்ட சோழபுரம்' ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 


கங்கை கொண்டசோழபுரம் ஆலயம், அதிலுள்ள முக்கிய சிற்பங்கள், தாங்கு  தளம் (அதிட்டானம்) போன்ற கட்டடப் பகுதிகள், மன்னன் வெட்டிய சோழகங்கம் ஏரி (இப்பொழுது வறண்டு கிடக்கிறது), அவனது அரச மாளிகை இருந்த இடம் எனப் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய காணொளியைப் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.முதன் முதலில் இந்தக் கங்கை கொண்ட சோழபுரம் பற்றி நான் அறிந்து கொண்டது அகிலனின் சரித்திர நாவலான 'வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் மூலமே. அந்நாவலின் இரண்டாம் பாகமான 'சோழபுரம் கண்டோன்' மன்னன் இராஜேந்திர சோழன் எழுப்பிய 'கங்கை கொண்ட சோழபுரம் ' அவன் உள்ளத்தில் எவ்விதம் உருவாகி , நிஜமாகியது என்பது  பற்றி எடுத்துரைக்கும்.  அப்பாகத்தின் தொடக்கத்தில் ஓவியர் வினு வரைந்திருந்த ஓவியம் இன்னும் மனக்கண்ணில் தெரிகிறது. 


அப்பாகத்தின் ஓர் அத்தியாயம் 'கருவில் உருவான கங்காபுரி'. அதில் இராஜேந்திரன் சோழர்  திருச்சிற்றம்பலச் சிற்பியார் களிமண்ணில் உருவாக்கிய 'கங்கை கொண்ட சோழபுரம்' நகரத்தின் மாதிரி கண்டு பிரமித்து நிற்பது விபரிக்கப்பட்டிருக்கும், ஓவியர் வினுவின் ஓவியத்தில் அக்காட்சி வரையப்பட்டிருக்கும். அந்த வரலாற்று நாவலுக்கு அப்போது இந்திய மத்திய அரசின் சாகித்திய விருது கிடைத்திருந்தது. அண்மையில் இங்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் வரலாற்றில் சொக்கிக் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்