தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும் முக்கியமான அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;
1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும். அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும். இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள். அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு. 'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.
தெணியான் |
2. ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களின் சமூக விடுதலைக்கு அவர்களது போராட்டம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஏனைய தமிழ்ச் சமூகங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும். இந்நாவலிலும் தமிழ் மக்கள் மத்திலுள்ள ஏனைய சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக இணைகின்றார்கள்.
இவை இந்நாவல் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக முன் வைக்கும் தீர்வுகள். இவ்வகையில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமொன்று தாம் வாழும் சமூகத்தில் எதிர்கொண்ட பல்வகை வர்ணரீதியிலான ஒடுக்குமுறைகளையும் (பெண்கள் மீதான பாலியல் வன்முறை, தீண்டாமை போன்ற) நாவல் தோலுரித்துக் காட்டுகின்றது. அவ்வகையில் முக்கியமானது மட்டுமல்ல புரட்சிகரமானதும் கூட.
இலங்கைத் தமிழர்களின் குறிப்பாக யாழ் மாவட்டத்தமிழர்கள் மத்தியில் புரையோடிக்கிடக்கும், வர்ணரீதியிலான சமூக அடக்கு, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, அனைத்துத் தமிழ்ச் சமூகங்களும் விழிப்படைய வேண்டியதன் அவசியததையும் , அச்சமூக விடுதலைகாகப் போராட வேண்டிய அவசியத்தையும் தெணியானின் 'குடிமைகள்' வலியுறுத்துகின்றது.
மேற்படி குடிமைகள் நாவலை முன்வைத்து, கனடாவிலிருந்து வெளியாகும் 'தாய் வீடு' சஞ்சிகையில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் 'தெணியானின் ‘குடிமைகள்’ – ஒரு வாழ்வியலின் ஆவணம்' என்னும் தலைப்பில் விமர்சனமொன்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது, அது வருமாறு:
"தெணியானின் குடிமைகள் இன்று உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் தமிழரின் எதிர்காலப் பணியையும் நுட்பமாகச் சுட்டிநிற்கின்றது. அடக்குமுறைகளால் அல்லற்பட்ட முத்தன் குடும்பம் வாழ்ந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து சென்று தமது வாழ்வை உயர்த்தியது போல புலம்பெயர்ந்த தமிழரும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற உணர்வுடன் வாழும் பக்குவ நிலை ஒரு புதிய உலகத்தையே உருவாக்கவல்லது. குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவரவர் திறமைக்கு ஏற்ற தொழிலைச் செய்யும் வாய்ப்பைப் பெறவேண்டும். குடிமைகள் நாவல் கூறும் சமூக நலனுக்கான தீர்வு இன்று தமிழரை நாடி வந்துள்ளது."
' முத்தன் குடும்பம் வாழ்ந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து சென்று தமது வாழ்வை உயர்த்தியது போல' என்று முனைவர் குறிப்பிடுகின்றார். முத்தன் குடும்பத்தின் எதிர்கால நிலை என்பது பற்றி நாவல் விபரிக்கவில்லை. தம் சமூக விடுதலையை நாடி , செய்த பரம்பரைத் தொழிலை, சொந்த மண்ணைக் கைவிட்டுப் புலம்பெயர்கின்றார்கள் முத்தன் குடும்பத்தினர். இனரீதியிலான் அடக்கு ஒடுக்குமுறைகள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள் பல்வேறு சமூகப்பிரிவுகளையும் சேர்ந்த இலங்கைத்தமிழர்கள். புகுந்த மண்ணில் அவர்கள் ஊரில தாம் செய்யாத தொழில்களையெல்லாம் , தப்பிப் பிழைத்தலுக்காக, தொழிலகள் என்னும் அடிப்படையில் செய்துதான் வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மை நிலை நிறுத்தியது போல் பல் தொழில்களையும் தொழில்கள் என்னும் ரீதியில் செய்யும் மனநிலையை இலங்கைத்தமிழர்கள் அடைய வேண்டும் என்று முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் கூறியிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருந்திருக்கும்.
'அவரவர் திறமைக்கு ஏற்ற தொழிலைச் செய்யும் வாய்ப்பைப் பெறவேண்டும். குடிமைகள் நாவல் கூறும் சமூக நலனுக்கான தீர்வு இன்று தமிழரை நாடி வந்துள்ளது.' என்று முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் குறிப்பிடுகின்றார். நாவல் இது பற்றியே தன் கவனத்தைத் திருப்பவில்லை. நாவலின் பிரதானமான நோக்கம் - ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலையென்பது , அவர்கள் மேல் திணிக்கப்பட்ட தொழில்களை அவர்களே செய்ய வேண்டுமென்ற தளைகளை உடைத்தெறிய வேண்டும் என்பதைத்தான். ' எல்லாவகைத் தொழில்களும் தொழிற் கல்வி மூலம் கற்பிக்கப்பட வேண்டும். விரும்பியவர்கள் அவற்றைக் கற்று , அவற்றைச் செய்ய வேண்டும்' இதனை மறைமுகமாக நாவல் எடுத்துக்கூறுகின்றது என்று முனைவர் மணோன்மணி சண்முகதாஸ் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது,
***********************************************************************************
தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - என்னும் எனது கட்டுரையின் சிங்கள மொழிபெயர்ப்பு- இதனைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்திருப்பது chatGPT என்னும் செயற்கைத் தொழில் நுட்பம். சிங்கள் மொழி அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் அறியத் தாருங்கள்.
තෙණියාගේ "කුඩිමைகள்" — සමාජ විමුක්තිය සඳහා වූ කැඳවුම! – යන මාගේ ලිපියේ සිංහල පරිවර්තනය — මෙය සිංහලයට පරිවර්තනය කර ඇත්තේ ChatGPT නම් කෘත්රිම බුද්ධි තාක්ෂණයයි. සිංහල භාෂාව දන්නා ඔබලා, පරිවර්තනයේ දෝෂ තිබේ නම් කරුණාකර දන්වන්න.
*******************************************************************************
තෙණියන්ගේ "කුඩිමைகள்" සමාජ නිදහස සඳහා වූ ඇහැරීම! – ව.න.ගිරිදරන් –
තෙණියන්ගේ කුඩිමைகள் නවකතාව ශ්රී ලංකා දෙමළ නවකතා අතර වැදගත් කෘතියකි. "ජීවනධි" ප්රකාශනයෙන්, "කරුප් ප්රති" මැතිවූ මෙම නවකතාව මෑතකදී කියවිය හැකි අවස්ථාව ලැබුණි. නවකතාවේ වැදගත් ඇහැරීම් ලෙස පහත කරුණු සඳහන් කළ හැක:
පන්චමර් නම් සමාජයෙන් මර්දනයට ලක්වූ ප්රජාවන් තමන්ට වසර ගණනාවක් තිස්සේ පැවති, සමාජය ඔවුන්ගෙන්ම කරවූ අඩු තත්ත්වයේ රැකියා වලින් මිදිය යුතුය. ඒ රැකියා තමන්ට පමණක් කරන ලෙස සමාජය පිහිටුවූ සම්ප්රදාය වෙනස් විය යුතුය. විදේශ රටවල්වල මෙන්ම සියලු මිනිසුන්ටත් අවශ්ය වෘත්තීන් හැමෝම ඉගෙන ගනිමින් කරන බවක් ඇති විය යුතුය.
මෙය පෙන්වීමට, කෙස් ඇලංකාරකයෙකු වූ මුත්තාන් සහ ඔහුගේ බිරිඳ තම ගොවිමැදුරෙන් පිටවී, රටේ වෙනත් ප්රදේශයකට ගොස් ජීවිතය ගොඩනගා ගනී. ඔවුන් පිටවූ පසු, ඔවුන්ගේ ගෙය තවත් දෙමළ තරුණයින් විසින් ගිනි තබයි. එය නවකතාවේ සංඛේතයකි – කුඩිමයි රැකියාව කරන මිනිසෙකුට මේ ගෙය ඉදිරියට අවශ්ය නැත.
මර්දනයට ලක්වූ දෙමළ සමාජ ප්රජාවන්ගේ නිදහස සඳහා ඔවුන්ගේම අරගලය වැදගත් මෙන්ම, අනෙක් දෙමළ සමාජ ප්රජාවන්ගේ සහයෝගයද අතිශය වැදගත්ය. මේ නවකතාවේද, අනෙක් දෙමළ ප්රජා වල තරුණයෝ එකට වී, මර්දනයට ලක්වූ සමාජයන්ගේ නිදහස සඳහා එක්ව කටයුතු කරති.
මේවා නවකතාව මර්දනයට ලක්වූ සමාජයන්ගේ නිදහස සඳහා ඉදිරිපත් කරන විසඳුම්ය. කුඩිමයි සමාජයක් තම සමාජයේ මුහුණ දෙන වර්ණ මර්දන, කාන්තාවන්ට එරෙහි ලිංගික පීඩන, තිඬම (Untouchability) ආදිය නවකතාව පැහැදිලිව ගෙන එයි. මෙය වැදගත් පමණක් නොව, විප්ලවීය ද වේ.
යாழ් මැදදෙමළ සමාජයේ දීර්ඝකාලීනව පැවති වර්ණ මර්දනට එරෙහිව සියලු දෙමළ සමාජයන් අවධානයෙන් සිට, සමාජ නිදහස සඳහා සටන් කළ යුතු බව තෙණියන්ගේ කුඩිමைகள் තීව්රව උදෙසා කියයි.
මෙම කුඩිමைகள் නවකතාව ඇසුරින්, කැනඩාවේ තායි වීඩු මැගසින් එකේ, මනෝන්මණි ශන්මුගදාස් මහතා “තෙණියන්ගේ ‘කුඩිමைகள்’ – ජීවිතමය ලේඛනයක්” යනුවෙන් විචාරයක් ලියා ඇත. එහිදී, ඔහු මෙසේ සඳහන් කරයි:
"තෙණියන්ගේ කුඩිමைகள், අද ලොව පුරා විසිරී සිටින දෙමළ ජනතාවගේ අනාගත කාර්යභාරය ඉතා නුපුළුස්සුවෙන් පෙන්වයි. මර්දනවලින් තුවාල වූ මුත්තාන්ගේ පවුල තම ගෙදර අතහැර ගොස් ජීවිතය ගොඩනගා ගත්තා මෙන්ම, පළාතට ගිය දෙමළ ජනතාවත් තමන් ස්ථිර කර ගත යුතුය. තම රැකියාව දෙවියන් ලෙස සැලකෙන මනෝභාවය නව ලෝකයක් තනන හැකියාව ඇත. නිශ්චිත රැකියාවකට සීමා නොවී, තම හැකියාවට ගැළපෙන රැකියාවක් කිරීමට අවස්ථාව ලැබිය යුතුය. ‘කුඩිමைகள்’ නවකතාවේ සමාජ සත්කාරක විසඳුම අද දෙමළ ජනතාව වෙත පැමිණ ඇත.”
ඔහු සඳහන් කළ, “මුත්තාන්ගේ පවුල ගෙදර අතහැර ගොස් ජීවිතය උසස් කළා මෙන්” යන අදහස, නවකතාවේ විස්තර නොවේ. නවකතාවේ අරමුණ වන්නේ – මර්දනයට ලක්වූ සමාජයන් තමන්ට බලකරවූ වෘත්තීන් අත්හැර, සියලු වෘත්තීන් වෘත්තීය අධ්යාපනයෙන් ඉගෙන ගෙන, කැමති අය ඒවා කරන්න යුතු බවය.
No comments:
Post a Comment