Wednesday, August 27, 2025

என் அபிமான நடிகர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும்! வருவார்!


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவரது நடிப்பு நெஞ்சை நிறைப்பது. அண்மைக்காலமாக அவர் உடல் நலமற்று இருப்பதாகவும், தற்போது நலம்டைந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.  எந்த வேடமென்றாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது குரலும், சிரிப்பும், நடிப்பும் எப்போதும் பார்ப்பவருக்கு இன்பத்தைத் தருவன.  விரைவில் பூரண நலத்துடன் மீண்டும் மம்முட்டி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.  வைக்கம் முகம்மது பஷீரின் குறுநாவலான 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி CBI துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் மலையாளத்திரைப்படங்கள் புகழ்பெற்றவை. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவர் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார். நடிகர்  மம்முட்டி ஆரம்பத்தில் சட்டத்தில் இளங்க்லைப் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றி நடிக்க வந்தவர் என்பது இவரைப்பற்றிய இன்னுமொரு தகவல்.

எனக்குப் பிடித்த மம்முட்டியின் பாடல்கள் சில:

1. சிவகாமி  நினைப்பினிலே...  https://www.youtube.com/watch?v=FYUEmBx75SE&list=RDFYUEmBx75SE&start_radio=1
2. ஒரு நாலு நாளாய் - https://www.youtube.com/watch?v=kAgchoDbYj4&list=RDkAgchoDbYj4&start_radio=1
3. கண்ணம்மா - https://www.youtube.com/watch?v=s3uQQ1XaHWo&list=RDQMGaSBBDKG54U&start_radio=1
4. மயக்கமா - https://www.youtube.com/watch?v=p0Cag2_s_MI&list=RDp0Cag2_s_MI&start_radio=1
5. ஆயகலைகளின் - ன்https://www.youtube.com/watch?v=z00yXwLkov0&list=RDz00yXwLkov0&start_radio=1

6. சங்கீத ஸ்வரங்கள் - https://www.youtube.com/watch?v=fxsPj4Hyry8&list=RDfxsPj4Hyry8&start_radio=1
7. சந்திமல்லிப் பூச்சரம் - https://www.youtube.com/watch?v=rDj8q4wa19E&list=RDrDj8q4wa19E&start_radio=1

8. நெஞ்சமடி நெஞ்சம் - https://www.youtube.com/watch?v=VXuO3HYajMw&list=RDVXuO3HYajMw&start_radio=1
9. கல்யாணத் தேன் நிலா - https://www.youtube.com/watch?v=nUccDfcPIgs&list=RDnUccDfcPIgs&start_radio=1
10. மழையும் நீயே. வெயிலும் நீயே - https://www.youtube.com/watch?v=SQx_XafP1Io&list=RDSQx_XafP1Io&start_radio=1
11. நன்றி  சொல்ல உனக்கு - https://www.youtube.com/watch?v=44L0_ZWR_cE&list=RD44L0_ZWR_cE&start_radio=1
12. Enthinu Veroru Sooryodayam  -  https://www.youtube.com/watch?v=PCYXeJlyGAY&list=RDPCYXeJlyGAY&start_radio=1
13.Poomaname Oru raga -   https://www.youtube.com/watch?v=BslnELBH-HE&list=RDBslnELBH-HE&start_radio=1
14. வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. - https://www.youtube.com/watch?v=4aFhSDunru4

No comments:

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத...

பிரபலமான பதிவுகள்