Thursday, October 9, 2025

காலத்தால் அழியாத 'செம்மீன்' மலையாளப்படப் பாடலொன்று!



எழுத்தாளர் தகழி சிவசங்கரம்பிள்ளையின் புகழ் பெற்ற மலையாள நாவல்களிலொன்று 'செம்மீன்'. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் , காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. 
 
இதன் திரைவடிவம் அதே பெயரில் வெளியாகிப் புகழ் பெற்றது. ராமு காரியாத்தின் இயக்கத்தில் வெளியாகி, இந்திய மத்திய அரசின் சிறந்த பட விருதுடன், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்ற திரைப்படம்.
 
சத்யன் (பழனி) , மது (பரீக்குட்டி) & ஷீலா (கருத்தம்மா) நடிப்பில் வெளியான திரைப்படம் , பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை,. வயலார் ராமவர்மா எழுதியுள்ளார். 
 
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர் பாடகர் மன்னா டே (Manna Dey).
 
* 'டிஜிட்டல்' தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG
 

Tuesday, October 7, 2025

'ராஜா ராணி'யில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,கலைஞரின் வசனமும்!


'ராஜா ராணி' நடிகர் திலகமும்,கலைஞரும் இணைந்த திரைப்படம். அதில் வரும் கலைஞரின் வசனங்கள் திரைவானில் மிகுந்த புகழ் பெற்றவை.


அத்திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் கலைஞரின் வசனங்களை இக்காணொளியில் கேட்டு மகிழுங்கள்.

'டிஜிட்டல் ' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG

https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

காலத்தால் அழியாத கானம்: 'மன்னிக்க வேண்டுகிறேன்.உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்'



 

படம் - இரு மலர்கள்
பாடல வரிகள் - கவிஞர் வாலி
இசை - எம்.எஸ்.வி
பாடகர்கள் - டி..எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - நடிகர் திலகம் & நாட்டியப் பேரொளி
பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=gkYcPC6CZv8&list=RDgkYcPC6CZv8&start_radio=1

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG



நடிகர் மம்முட்டியின் மீள்வருகை! வாழ்த்துகள்!


என் அபிமான நடிகர்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி சிறிது காலம் உடல் நிலை காரணமாக ஒது ங்கியிருந்து மீண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அதே உற்சாகத்துடன் அவர் திரைவானில் சிறகடித்துப் பறக்க வாழ்த்துகள். 
 
அவரை வேற்கும் அதே சமயம் எனக்குப் பிடித்த அவரது படப் பாடல்களிலொன்றினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
 
'கார்னிவல்' திரைப்படத்தில் , ஷியாமின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைப் பாடியிருப்பவர் உன்னி மேனன். பாடல் வரிகள் - சிபு சக்கரவர்த்தி. இப்பாடல் காட்சியில் மம்முட்டியுடன் நடித்திருப்பவர் பார்வதி.
 
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி ; VNG
 

Monday, October 6, 2025

காலத்தால் அழியாத கானம்: 'எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்'



 

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -

இடையிலொரு காலத்தால் அழியாத கானமொன்றைக் கேட்கும் நேரம்: 'முகராசி'யில் , திரையிசைத்  திலகம் கே.வி.எம்மின் இசையில், டி.எம்.எஸ்ஸின் குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கவிஞர் கண்ணதாசனின் மொழியில் ஒலிக்கும் பாடல். அறுபதுகளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் இதுவுமொன்று.

பாடலைக் கேட்க https://www.youtube.com/watch?v=FQy9u9hekT8

காலத்தால் அழியாத கானம் - ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன். நீ ஒரு தனிப்பிறவி.


 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -

என் பால்ய பருவத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்களில் ஒன்று. கவிஞர் கண்ணதாசனுக்கு உரிய எளிய,ஆனால் நெஞ்சைக்கொள்ளை கொள்ளும் மொழி, கே.வி.எம்மின் இசை, அபிமான நடிகர்களின் உற்சாகமும், துடிப்பும் மிக்க நடிப்பு, அதை அப்படியே குரலில் பிரதிபலிக்கும் பாடகர்கள் டி.எம்.எஸ் & பி,சுசீலாவின் குரலினிமை இவையெல்லாம் இப்பாடல் என் நெஞ்சில் அழியாமல் நிலைத்து நின்று விட்டதற்கான காரணங்கள்.

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=rx1SzJsq9tU

காலத்தால் அழியாத கானம் ; 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது'


விவசாயி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களிலொன்று. கவிஞர் உ டுமலை நாராயணகவியின் வரிகளும், திரையிசைத்திலகத்தின் இசையும், டி.எம்.எஸ் & பி;சுசீலாவின் குரலினிமையும், எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயாவின் நடன அசைவுகளும், நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

என் பால்ய வயதில் வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த படங்களிலொன்று தேவரின் 'விவசாயி'.

'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=uAI_apwFvrg

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...