Saturday, November 8, 2025

ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்' நாவல் மின்னூலாக...


ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவலான  'கடலும் கிழவனும்' நாவல் தற்போது மின்னூலாகக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ...

https://amzn.to/4os8Nd1

Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases. 

 

ஜெகசிற்பியனின் நாவல்கள் அமேசன் - கிண்டில் பதிப்பு மின்னூல்களாக..


எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக்கோட்டம்' ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.

 அவரது 'ஜீவகீதம்' நாவல் இந்திய மொழிகள் பலவற்றில் 'தேசிய புத்தக அறக்கட்டளை' யினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவரது சமூக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இதனைக் கூறலாம்.


தற்போது வானதி பதிப்பக வெளியீடுகளான , ஜெகசிற்பியனின் ஜீவகீதம், நந்திவர்மன் காதலி, பத்தினிக்கோட்டம் ஆகியவை அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. விபரங்கள் வருமாறு:

1. ஜீவகீதம் -  https://amzn.to/4oXYZaD

2. பத்தினிக் கோட்டம் (2 பாகங்கள்) -

பாகம் 1 - https://amzn.to/4qGnt9Y
பாகம் 2 - https://amzn.to/4oveLKd

3. நந்திவர்மன் காதலி - https://amzn.to/4oVlAo7

Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases. 

பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!


 

[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]

நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.

இவ்வளவு நடந்த பிறகு  யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார்.  இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும்  தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன?  இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத்  தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.  

எவ்வித  ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று,  சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத்  தொழில் நுட்ப விதிகள்  மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு  ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை.  சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை.  இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.

கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான். 

புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.

கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும்  காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs




Friday, November 7, 2025

புகலிடச் சிறுகதை - ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன் -

[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]


[‘தாயகம்’ (கனடா) பத்திரிகையில் வெளியான இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]


ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

புகலிடச் சிறுகதை: யன்னல்! - வ.ந.கிரிதரன் -

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

Thursday, November 6, 2025

‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -



முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்  மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI)


"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)

'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த்  ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின்  கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.

Wednesday, November 5, 2025

ஆய்வுக் கட்டுரை: உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் . ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –

 

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 


முனைவர் ஆர். தாரணி ணி
[2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக்  கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan,  முனைவர் ஆர்.தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது.  தமிழாக்கம் சிறப்பாகவே அமைந்துள்ளது.  ஒரு சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]

உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின்  (வெண்ணிறக் கடற்பறவை)  தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு!  -  முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –


இலக்கியம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் கண்டறிய முடியாத அனுபவங்களின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வது சாத்தியமற்றது. உலக இலக்கிய வரலாற்றில், காதல், வீரம் மற்றும் மகிழ்ச்சியான முடிவுகளை விட பேரழிவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் துயரங்கள் அவர்களுக்கு எப்போதும் உரிய நீதியைப் பெற்றுத்தந்துள்ளன. இனப் பின்னணி காரணமாக அச்சுறுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் துயரங்கள் மேற்கத்திய நாடுகளில் பல சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலும், உயிர்வாழ்வதற்கான நெருக்கடியே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிடத்தில் நிற்கிறது. மனிதன் இந்த கிரகத்தில் தனக்கென ஒரு இடத்தைக் கண்டறிய போராடுகிறான். தேசியம், பிறப்பிடம், சமூகம், குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவை ஒரு மனிதனின் உயிர்வாழ்வதற்கான உந்துதலை உறுதிப்படுத்தும் விஷயங்களாகும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...