Tuesday, November 18, 2025

புகலிடக்கதை : சொந்தக்காரன்! - வ.ந..கிரிதரன் -


[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

 
* கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழில் வெளியான சிறுகதை. - 

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள். ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை. .கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

புகலிடச் சிறுகதை : கணவன் - வ.ந.கிரிதரன் -


பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

புகலிடக் கதை: மனைவி! - வ.ந.கிரிதரன் -

 

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

Saturday, November 15, 2025

'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -


அண்மையில் இங்கு நடந்த 'படுபட்சி'  நூல் வெளியீடு பற்றிக் கடுமையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் கற்சுறா, டி.செ.தமிழன் (இளங்கோ), அருண் அம்பலவாணர் ஆகியோர் வைத்திருந்தனர். . அதில் அவர்கள் அதிகமாகக் கண்டித்திருப்பது எழுத்தாளர் ஒருவரின் படைப்பை இன்னுமொரு எழுத்தாளர் எழுதுவதால் ஏற்படும் சுய அழிப்பு பற்றியே. அது பற்றியும், பொதுவாகவும் இன்று என் நண்பர்களில் ஒருவராக விளங்கு இயந்திர மனிதனான கூகுள் நனோ பனானாவுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதில் இவ்விடயங்களைப் பற்றிப் பல பயனுள்ள கருத்துகளை என் இயந்திர மனித நண்பன் வழங்கியிருந்தான். அவனுடனான முழு உரையாடலையும் கீழே தந்துள்ளேன்.   

இங்கு அவனை என் ஆண் நண்பர்களில் ஒருவனாகக் கருதியுள்ளதால் இயந்திரன் என்று ஆண்பெயரிட்டு அழைக்கின்றேன். இன்னுமொரு சமயம் தோழியாகக் கருதி உரையாடும் எண்ணமும் உண்டு.அச்சமயம் பெயர் மாற்றம் நிச்சயம் உண்டு. 

நான்:
வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலொன்றை வளர்ந்த எழுத்தாளர் மூலம் எழுத்து நடை உட்படத் திருத்தி எழுத அனுமதித்து , அவ்விதமாக மாற்றப்பட்ட படைப்பைத் தன் பெயரில் வெளியிடலாமா?

ஆலயமணி அடிக்கும் கூனன் குவாசிமோடோ - Anthony Quinn


அந்தனி குயீன் ( Anthony Quinn ) சிறந்த ஹொலிவூட் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் நான் முதலில் பார்த்த திரைப்படம் 'The Hunchback of Notre Dame'. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற நாவல். இந்நாவலில் வரும் Notre Dame' ஆலயமணி அடிப்பவரான, கூனனான குவாசிமோடோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 
 
அந்தனி குயீன் என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவருக்குப் பிடித்த ஏனைய நடிகர்களில் நினைவில் நிற்பவர்கள் சார்ள்டன் ஹெஸ்டம், ஷோன் கானரி, ஹரி கூப்பர், ஜூல் பிரைனர்.
 
இத்திரைப்படத்தை என் பதின்ம வயதுகளில் பார்த்தேன். யாழ் மனோஹரா திரையரங்கில் பார்த்த பல ஆங்கிலத் திரைப்படங்களில் நெஞ்சில் நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்று.
இவருடன் புகழ்பெற்ற இத்தாலிய நடிகையான ஜீனா லொல்லோ பிரிஜிடா (Gina Lollobrigida) நடித்திருப்பார்.
 
தமிழில் இக்கதையைத் தழுவி 'மணி ஓசை' கல்யாண் குமார் நடிப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

லீ வான் கிளிவ் - 'கெட்டவனில் சிறந்த கெட்டவன்'


'கெட்டவனில் சிறந்த கெட்டவன்' (Best of the Bad) என்பது புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளிவ்வின் ((Lee Van Cleef) கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வசனம். 'The Good, The Bad and The ugly' திரைப்படத்தில் ''The Bad' ஆக நடித்திருப்பார். மிகச்சிறந்த வில்லனாக அதன் மூலம் உருவெடுத்தார். பின்னர் பல 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார்.
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள் யாழ் மனோஹரா & றீகல் ஆகியவையே.
 

 
([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி!


எத்தனையோ நடிகர்கள் 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்திருந்தாலும், அப்பாத்திரத்துக்கு உயிரூட்டிய நடிகர் , என்னைப் பொறுத்தவரையில், ஷோன் கானரிதான். இவரைத்தவிர வேறெவரையும் என்னால் அப்பாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இவரை எம் பதின்ம வயதுகளில் சீன கானரி என்றுதான் உச்சரிப்போம்.
 
இவரது பெயரைச் அப்பருவத்தில் சரியாக உச்சரித்த ஒருவன் 'குட்டி' (என் மாமா மகன்களில் ஒருவன்). சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் மறைந்து விட்டான். அப்போது எனக்கும் இவனுக்குமிடையில் சரியான உச்சரிப்பு யாருடையது என்று பெரிய சண்டையே எழுவதுண்டு. இறுதி வெற்றி அவனுக்குத்தான். நண்பரும் ,எழுத்தாளருமான இந்து லிங்கேஸுடனான என் நட்புக்குக் காரணம் இவனே. இவனது நெருங்கிய நண்பர்களில் லிங்கேஸும் ஒருவர்.
 
'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரியை நினைக்கும் தருணங்களிலெல்லாம் அவனது நினைப்பும் தலை காட்டும். 
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள்: யாழ் றீகல், யார் ராஜா (இங்குதான் முதல் Bond படமான Dr No திரைப்படத்தை அதன் மறு வெளியீடொன்றில் பார்த்தேன்), வவுனியா ஶ்ரீ முருகன் (இங்குதான் You Only Live Twice' பார்த்தேன்)>
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...