Saturday, November 15, 2025

ஆலயமணி அடிக்கும் கூனன் குவாசிமோடோ - Anthony Quinn


அந்தனி குயீன் ( Anthony Quinn ) சிறந்த ஹொலிவூட் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் நான் முதலில் பார்த்த திரைப்படம் 'The Hunchback of Notre Dame'. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற நாவல். இந்நாவலில் வரும் Notre Dame' ஆலயமணி அடிப்பவரான, கூனனான குவாசிமோடோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 
 
அந்தனி குயீன் என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவருக்குப் பிடித்த ஏனைய நடிகர்களில் நினைவில் நிற்பவர்கள் சார்ள்டன் ஹெஸ்டம், ஷோன் கானரி, ஹரி கூப்பர், ஜூல் பிரைனர்.
 
இத்திரைப்படத்தை என் பதின்ம வயதுகளில் பார்த்தேன். யாழ் மனோஹரா திரையரங்கில் பார்த்த பல ஆங்கிலத் திரைப்படங்களில் நெஞ்சில் நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்று.
இவருடன் புகழ்பெற்ற இத்தாலிய நடிகையான ஜீனா லொல்லோ பிரிஜிடா (Gina Lollobrigida) நடித்திருப்பார்.
 
தமிழில் இக்கதையைத் தழுவி 'மணி ஓசை' கல்யாண் குமார் நடிப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

No comments:

புகலிடக்கதை : சொந்தக்காரன்! - வ.ந..கிரிதரன் -

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]     * கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழில் வெளியான சிறுகதை...

பிரபலமான பதிவுகள்