Thursday, November 13, 2025

இந்தியத் திரை வானின் 'வானம்பாடி' பி.சுசீலாவுக்கு வயது 90!


இன்று பாடகி பி.சுசீலா அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவர்கள் தமிழ்த்திரையுலகின் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் & இயக்குநர்கள்.

இவர்கள் அனைவரும் எம் வாழ்வின் இன்ப துன்பங்களில் துணையாக எம் வாழ்நாள் முழுவதும் வருபவர்கள். இனிய தருணங்களில் உற்சாகம் , இன்பம் தருபவர்கள் இவர்கள். துயர் நிறைந்த தருணங்களில் ஆறுதல் தருபவர்கள் இவர்கள்.

இவர்களை நான் எப்போதும் போற்றுவேன். இலக்கிய கர்த்தாக்கள் எவ்விதம் எம் வாழ்வுக்கு முக்கியமோ அவ்விதமே இக்கலைஞர்களும்.

இன்னும் நீண்ட காலம் நிறைவான வாழ்வுடன் அம்மையாரின் வாழ்வு தொடரட்டும். வாழ்த்துகள்.

இத்தருணத்தில் எனக்குப் பிடித்த இவரது பாடல்களிலொன்று இந்தப்பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில், கவிஞர் வாலியின் எழுத்தில், ஜெயலலிதா, எம்ஜிஆர், துணை நடிகர்களின் நடிப்பில் ஒலிக்கும் பாடல். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப்பாடல்.

https://www.youtube.com/watch?v=HTvrtkkYaDg

[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
See less

No comments:

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!

[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1   -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மக...

பிரபலமான பதிவுகள்