Tuesday, November 25, 2025

இவர் யார் தெரியுமா?


இவர் யார் தெரியுமா? இவர்தான் இலங்கையின் பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சர்.  இவர் தமிழ்ப்பெண்.  சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறைத்   தேர்தல் தொகுதியில் 148,379 வாக்குகள் பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எதற்கெடுத்தாலும் ஜேவிபி முன்பு இனவாதக் கட்சி. எப்படி மாறுவார்கள் என்று தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் அப்போது இப்பெண்மணியையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக் வாழும், தெற்கு மாகாணத்திலுள்ள மாத்தறைப் பகுதியிலிருந்து, அதுவும் மகிந்த ராஜபக்சாவின் கோட்டையிலிருந்து தமிழ்பெண் ஒருவரைச் சிங்கள மக்கள் தம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால், அவரைப் பெண்கள் , குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி ஆக்கியிருக்கின்றதென்றால்,  ஜேவிபி மட்டும் மாறவில்லை., சிங்கள மக்களும் மாறியிருக்கின்றார்கள்.  ஆனால் தோற்ற இனவாத அரசியல்வாதிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிக்கட்டிலேறத்   துடிக்கின்றார்கள். இந்நிலை மீண்டும் வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நன்றாகவிருக்கப்போவதில்லை.நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் புதிய மாற்றத்துக்கு ஊறு விளைவிக்காத வகையுல் , தம் பிரச்சனைகளை ஆரோக்கியமான வழியில் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தமிழ்பெண் ஒருவரைத்  தம் தேர்தல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த சிங்கள மக்களுக்கு, அவரை நிறுத்தியதுடன் அமைச்சர் பதவியையும் வழங்கிய தேசிய மக்கள் கட்சிக்கும் வாழ்த்துகள்.  இவரது தெரிவு இனவாதத்துக்கு எதிரான தெரிவு. இந்நிலை நாட்டில் தொடரட்டும். அதுவே நல்லது.

No comments:

நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!

நண்பர்களே!  என் முகநூல் பக்கம் இரு  பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத்  தாங்கி வரும் பகுதி.  இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்...

பிரபலமான பதிவுகள்