'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, November 13, 2025
கவிஞர் தாமரையின் பாடல்களும், வட மொழிச் சொல்லும் பற்றி...
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
கவிஞர் தாமரையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வேற்று மொழியல்லாத தமிழ்ச் சொற்களை மட்டும் கவிதை எழுதுபவர் என்று கூறப்பட்டிருந்ததை அண்மையில் இணையத்தில் வாசித்தேன். இது உண்மையா? 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் அவரது புகழ்பெற்ற பாடல் 'நெஞ்சுக்குள் பூத்திடும் மாம்ழை' முழு வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதில் வரும் ஓம், ஷாந்தி, ஜீவன் இவையெல்லாம் வட் சொற்கள். என்னைபொறுத்தவரையில் நான் தனித்தமிழ் வெறியன்னலன். மொழியும் பரிணாம வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைகின்றது என்று நம்புபவன். இந்நிலையில் தாமரை தமிழ்ச் சொற்களை, வட சொற்களைக் கலந்து பாடல்கல் எழுதுவதை ஏற்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. என் அபிமானக் கவிஞர் மகாகவி பாரதியார் தாராளமாகவே வடமொழிச் சொற்களைப் பாவித்திருக்கின்றார்.
பாடலைக் கேட்டு மகிழ் - https://www.youtube.com/watch?v=630HSN45fKkஅப்பாடலின் முழு வரிகள் வருமாறு:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!
நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!
இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சு போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சு போகாதே!
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!
என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
Subscribe to:
Post Comments (Atom)
வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!
[ வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மக...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment