Thursday, November 13, 2025

காலத்தால் அழியாத கானம்: 'புதிய வானம்! புதிய பூமி'



'அன்பே வா' திரைப்படத்தில், கவிஞர் வாலியின் வரிகள் , டி,எம்.எஸ் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், எம்ஜிஆரின் நடிப்பில் காலத்தால் அழியாத கானமாக நிலைத்து நின்று விட்டது.
 
இவ்விதமான எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க, வாழ்க்கைக்கு வழி காட்டும் , புத்துணர்ச்சி ஊட்டும் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்களாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கப்போகின்றன.
 
எந்த ஒரு நடிகரும் செய்யாத வேலையினை எம்ஜிஆர் செய்திருக்கின்றார். அவரது படங்கள் ஒவ்வொன்றிலும் இத்தகைய கருத்து மிக்க, இனிய, புத்துணர்ச்சி தரும் பாடலொன்று இருக்கும். வாழ்க்கைக்கு வழி காட்டும் , பயனுள்ள, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் இவை. எம்ஜிஆரின் சமுதாயப் பிரக்ஞையை வெளிப்படுத்துபவை இவ்வகைப் பாடல்கள்.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயண கவி , முத்துலிங்கம் என்று பாடலாசிரியர்கள் பலரின் பாடல்களைக் காலத்தால் அழியாத கானங்களாக நிலைபெறச் செய்து விட்டது எம்ஜிஆரின் சமுதாயப் பிரக்ஞை மிக்க ஆளுமை.
 
பொழுது போக்குக்காக மட்டுமல்லாமல் , வாழ்க்கை வழி காட்டும் கருத்துகளை உள் வாங்கும் சாதனங்களாகவும் தன் திரைப்படப் பாடல்களை, திரைப்படங்களை வழங்கியிருப்பவர் எம்ஜிஆர்.
 
பாடலைக் கேட்க - https://youtube.com/watch?v=tY7wmv-UDGQ
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 
மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் | எம்.ஜி.ஆருடன் அனுபவங்கள்-| எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் https://amzn.to/3WUXGNF
 
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
 

No comments:

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!

[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1   -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மக...

பிரபலமான பதிவுகள்