2. பிரபலமான பதிப்பங்கள் மூலம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல்.
3. விருதுகள் வழங்கல்.
4. முதுகு சொறியும் விமர்சனங்கள் எழுதுதல்.
5. பக்தகோடிகள் பதிலுக்கு ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் முதன்மையானவராகத் தம்மை அடையாளப்படுத்தல்.
நான் இதுவரை மனித உரிமைக்காக உளச்சுத்தியுடன் செயற்படுபவர்களாகக் கருதிய சில ஆளுமைகளும் இவ்விதமான பதிலுக்குப் பதில் முதுகு சொறியும் பக்தகோடிகளே என்பதை கண்டு பிரமித்திருக்கின்றேன்.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நான் கூறுவது:
எதற்காகவும் ,யாருக்காகவும் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள், எவரையும், எதையும் திருப்திப்படுத்துவதற்காக எழுதாதீர்கள்( உழைப்புக்காக எழுதும் வர்த்தக எழுத்தாளர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை) .
உங்கள் உணர்வுகளைக் குறை, நிறைகளுடன் வெளிப்படுத்துங்கள்.
முதலில் ஒரு வாசகராக , உங்கள் எழுத்துகள் உங்களுக்குத் திருப்தியைத் தருபவையாக இருக்க வேண்டும். இன்னொருவருக்குத் திருப்திப்படுத்தும் எழுத்துகளாக மட்டும் அவை இருக்கக் கூடாது.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG. என் புகைப்படத்தைக் கொடுத்தேன். நிபந்தனைகளை எடுத்துரைத்தேன். கூகுள் நனோ பனானா இவ்விதம் வரைந்து தந்தது. நன்றி நனோ பனானா!]
No comments:
Post a Comment