Friday, June 19, 2020

மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல்! தமிழில் முனைவர் ர.தாரணி.

 

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - பாரதியார் -

அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக முனைவர் ஆர்.தாரணியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் விரைவில் நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. அவருக்கும் , பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள். இம்மொழிபெயர்ப்பு நூல் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முனைவர் ஆர்.தாரணி அவர்களுக்கு மீண்டுமொருமுறை பாராட்டுகளைப் 'பதிவுகள்' சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதற்குப் 'பதிவுகள்' இணைய இதழ் களமாக அமைந்தது திருப்தியினைத் தருகின்றது.



No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்