Saturday, December 2, 2023
ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கிரிதரன் -
ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன். விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.
ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி , எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும். ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.
Saturday, November 25, 2023
(பதிவுகள்.காம்) முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -
- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள் கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும் எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.
எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.
“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.
Friday, November 24, 2023
வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. -
மூன்று விதமான அறிமுகங்களாக என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன். புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச் சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில் அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.
முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம். இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது. கபொத சாதாரண தர வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.
Monday, November 20, 2023
கனடா: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடும், உரையாற்றியவர்களும் & சிறப்புப் பிரதிகள் பெற்றவர்களும் பற்றிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
இன்று எழுத்தாளார் வ.ந.கிரிதரனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள் இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
நிகழ்வில் நூல்கள் பற்றிய அறிமுக உரையினை ஆற்றியவர்கள்:
Monday, November 13, 2023
அன்பான நினைவூட்டல்: 'டொரோண்டோ' , கனடாவில் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீடு (நவம்பர் 19, 2023)
வணக்கம் நண்பர்களே! எனது மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகமும் பற்றிய தகவலை இங்கு மீண்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.
'இசைக்குயில்' பி.சுசீலா!
நவம்பர் 13 பி.சுசீலாவின் பிறந்ததினம்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
'இசைக்குயில்', 'கான கோகிலா', 'மெல்லிசை அரசி' & 'கான சரஸ்வதி' என்று அழைக்கப்படும் பி.சுசீலா (புலப்பாக்க சுசீலா) தமிழ், தெலுங்கு, கன்னடம், ,மலையாளம், இந்தி, சிங்களம் & சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இந்திய மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் ஐந்து தடவைகள் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். இவர் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து சுமார் 1000 பாடல்களைப் பாடியுள்ளதாக விக்கிபீடியா கூறுகிறது. நவம்பர் 13 அவரது பிறந்ததினம்.
சுசீலா என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் 23 பாடல்கள் இவை:
1. அமுதைப் பொழியும் நிலவே
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
3. உன்னை நான் சந்தித்தேன்
4. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன
5. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
6. மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
7. நீ இல்லாத உலகத்திலே
8. நினைக்கத்தெரிந்த மனமே
9. என்னை மறந்ததேன் தென்றலே
10. பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்
11. அத்தை மகனே
12. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
13. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
14. நாளை இந்த வேளை பார்த்து
15. அன்புள்ள மான்விழியே
16. உன்னை ஒன்று கேட்பேன்
17. ஆயிரம் நிலவே வா
18. நலந்தானா நலந்தானா
19. சொன்னது நீ தானா?
20. காதல் சிறகைக் காற்றினில் விரித்து
21. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
22. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
23. கல்யாணம் ஆனவரே செளக்கியமா?
கல்யாணம் ஆனவரே செளக்கியமா? உங்கள் கண்ணான பெண் மயிலும் செளக்கியமா? - https://www.youtube.com/watch?v=w-b-H-nJ7Nk
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - https://www.youtube.com/watch?v=T8piDlTHqXQ
'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!
- இயக்குநர் பாரதிராஜா - இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர். நாடகத்தனமான வசனங்களு...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

.jpg)




