Saturday, July 20, 2024

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல் : AI SUNO - 

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

 
படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித் தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

Friday, July 19, 2024

பாடல்: அது ஒரு கனாக் காலம். - வ.ந.கிரிதரன் -


                                                                    - இசை அமைப்பு & குரல்; AI SUMO -

- எம் பதின்ம வயதுகளில் யாழ்ப்பாண நகரத்துத் திரையரங்குகள் பிரதான பங்கு வகித்தன. எங்கள் சுப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் தொடக்கம், ஆங்கில் படங்கள் வரை பல பார்த்தோம். மகிழ்ந்தோம். எம் சுப்பர் ஸ்டார்களுக்கு ஓவியர் மணியம் வரைந்த பிரமாண்டமான கட் அவுட்டுகளையும் மறக்க முடியாது. அவற்றைப் பற்றியதொரு நனவிடை தோய்தலே இப்பாடல்.-

 AI SUNO.

பாடல்: அது ஒரு கனாக் காலம்.  - வ.ந.கிரிதரன் -

அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.

யாழ் நகரத்துத் தெருக்களில்
வாழ்வு கழிந்த டீன் ஏஜ் நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.

அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.

Thursday, July 18, 2024

கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்

கவிதை; கறுப்பு ஜூலை  - வ.ந.கிரிதரன்


                                                          - இசை & குரல்: AI SUMO -

கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டே நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.

கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.

அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.

கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -



[ இசை & குரல் - AI Suno |  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ ]
 
கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
 
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?

விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -




                                                                              - இசை & குரல் - AI SUNO -


[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?  வ.ந.கிரிதரன் -

Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

Wednesday, July 17, 2024

பாடல் - குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

 

      - இசை & குரல் - AI SUNO  -

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI SUNO வுக்கு நன்றி ]

'YouTube' Link - https://www.youtube.com/watch?v=Iuy2svIdTp8&feature=youtu.be

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு  இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.

பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -



                                                        - இசை & குரல்; AI Suno | ஓளிப்பதிவு: AI Hedra -
 
பாடலுக்கான யு டியூப் இணைப்பு - https://www.youtube.com/watch?v=TBzGdyKGqVA&feature=youtu.be
 
[என் கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதையான 'தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை' என்னும் கவிதையில் சில மாற்றங்களைப் பாடுவதற்கேற்ற வகையில் செய்துள்ளேன்.]
 
பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?
 
கட்டுக்களற்ற உலகம்.
கவலைகள் இல்லை.
சட்டங்களற்ற உலகம்.
சோகங்கள் இல்லை.
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிப்பர் என் பின்னே.
பால் வீதிகளில்
பறந்து மீள்வேன்.
பெருமிதம் பொங்கும்.
 
நோக்கங்கள் விளங்கும் வாழ்வு.
தாக்கங்கள் இல்லை தானே.
ஏக்கங்கள் இல்லை தா\னே.
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...