Wednesday, July 17, 2024

பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -



                                                        - இசை & குரல்; AI Suno | ஓளிப்பதிவு: AI Hedra -
 
பாடலுக்கான யு டியூப் இணைப்பு - https://www.youtube.com/watch?v=TBzGdyKGqVA&feature=youtu.be
 
[என் கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதையான 'தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை' என்னும் கவிதையில் சில மாற்றங்களைப் பாடுவதற்கேற்ற வகையில் செய்துள்ளேன்.]
 
பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?
 
கட்டுக்களற்ற உலகம்.
கவலைகள் இல்லை.
சட்டங்களற்ற உலகம்.
சோகங்கள் இல்லை.
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிப்பர் என் பின்னே.
பால் வீதிகளில்
பறந்து மீள்வேன்.
பெருமிதம் பொங்கும்.
 
நோக்கங்கள் விளங்கும் வாழ்வு.
தாக்கங்கள் இல்லை தானே.
ஏக்கங்கள் இல்லை தா\னே.
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?

No comments:

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

அமரர் ஈழநாதன்  எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும...