Monday, July 29, 2024

சமநீதி பிறக்கட்டும் எங்கும். - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=EAbi7zZI9t0

 சமநீதி பிறக்கட்டும் எங்கும்!

சமநீதி இல்லையேல் அநீதியே.
சமநீதி எங்கும் இருந்தால்
வர்க்கப் பிரிவுகள் மறையும்.
வர்ணப் பிரிவுகள் மறையும்.

ஆண், பெண் பிரிவுகள் ஒழியும்,
அனைத்துப் பிரிவுகளும் ஒழியும்,.
பிரிவுகள் நீங்க வேண்டுமானால்
பிறக்கட்டும் இங்கு சமநீதி.

சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.

உதிரத்தில் இல்லை வேறுபாடு.
உதிக்கட்டும் சமநீதி உலகம்.
உணர்ந்து செயற்படுவோம் நாம்.
உதிக்க வைப்போம் சமநீதி உலகை.

போர் சூழந்த உலகு எதனால்?
பாகுபாடு மிக்க உலகு அதனால்.
பாகுபாடு நீக்கி வைப்போம்.
போர்களை ஒழித்து வெல்வோம்.

சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.



No comments:

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!

கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக...

பிரபலமான பதிவுகள்