Thursday, July 4, 2024

'இறைவன் என்றொரு கவிஞன். அவன் படைத்த கவிஞன் மனிதன்' - கவிஞர் கண்ணதாசன்

'ஏன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை - டி.ஆர்.பாப்பா. பாடியவர் - எஸ்.பி.பி. நடிப்பு - ரவிச்சந்திரன் & லட்சுமி.
 

இறைவனைக் கவிஞனாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். மகான்களை அக்கவிதைகளில் காவியங்கள் என்கின்றார். கவிஞரின் இக்கற்பனைச் சிறப்புக்காகவே எனக்குப் பிடித்த பாடலிது. பாடலுக்கு எஸ்.பி.பி.யின் குரலும், பாப்பாவின் இசையும், ரவிச்சந்திரனின் நிதானமான நடிப்பும் இப்பாடலின் மேலதிகச் சிறப்பம்சங்கள்.
 
'கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்ணிடம் பிறந்ததை பெண்ணுக்கே அளித்தான்' என்னும் வரிகளை ரவிச்சந்திரன் பாடுகையில் லட்சுமி வெளிப்படுத்தும் நாணம் மறக்க முடியாதது.
தத்துவத்தையும், காதலையும் இவ்வளவு சிறப்பாகக் கண்ணதாசனைத்தவிர வேறெவராலும் எழுத்தில் வடித்திருக்க முடியாது. இதனை நன்கு வெளிப்படுத்தும் வகையில் காட்சியை அமைத்த இயக்குநரின் திறமையையும் இப்பாடல் நன்கு வெளிப்படுத்தும்.
 

No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்