Sunday, July 28, 2024

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

                                                             - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=lAkI4-J5IOU

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

முகமூடிகள்  வாழும் பூமியிது.
முகமூடிகள்  வாழும் பூமியிது.

முகமூடிகளின் உலகில்
மரணித்து விட்டது உண்மைவ்
வன்மம் உள் வைத்து
நன்மொழி பகர்வார் வெளியில்.

முட்டாள்களும்  முகமூடிகளில்
பேரறிஞர்களே.

முகமூடிகளை நண்பரென்று
மனத்தில்
எண்ணியதுமுண்டு.
ஏமாந்து கிடந்ததும் உண்டு.

வன்மம் நிறைந்திருக்கும் முகமூடிகள் உலகில்
நன்மைதான் ஏது?

இருக்கும் துளி இருப்பில் முகமூடிகளே
இனியும் என்னால் பொன் நேரத்தை
இழக்க முடியாது.

முகமூடிகளே .ஓடி ஒளியுங்கள்.
அல்லது
முகமூடிகளை அகற்றி விட்டு
அவதாரம் எடுங்கள். புது
அவதாரம் எடுங்கள்.

மாறுவதில் சிரமம் என்றால்
முகமூடிகளே.ஓடி மறையுங்கள்.
முகமூடிகளே.ஓடி மறையுங்கள்.

முகமூடிகள் அற்ற உலகில்
அகம் மகிழ்ந்து இருக்கவே
நான் எப்போதும் விரும்புகின்றேன்.
ஏன் என்றால் அழுத்தங்கள்
எவையுமற்ற இருப்பை அவை
எனக்குத் தருகின்றன, அதனால்.

இருக்கும் சிற்றிருப்போ இங்கு
சிறியது. மிகவும் சிறியது.
இதற்குள் எனக்கு நிறையவே
இருக்கின்றன பணிகள் செய்வதற்கு.
அதனால்
உங்களுடன் கூடிக் குலாவிட
இங்கெனக்கு நேரம் இல்லை.

முகமூடிகளே. ஓடி விடுங்கள்.
முகமூடிகளே. ஓடி விடுங்கள்.



No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்