Monday, July 15, 2024

சிவப்புச் சூரியன்!



அண்மையில் ஒரு மாலை  'ஸ்கார்பரோ டவுன் சென்டர்' சென்று திரும்புகையில் அந்தி வானில் சிவப்புச் சூரியனை அவதானித்தேன். அப்பொழுது இளைய மகளிடம் அதைப்புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.அப்போது எடுத்த புகைப்படம்.
அதிகாலை, மாலை நேரங்களில் சூரியன் தொலைவில் இருப்பதால், அதிலிருந்து வரும் குறைந்த அலை நீளம் மிக்க நீலக் கதிர்கள் சிதறல் மூலம் சிதறிக்கப்பட்டு விடுகின்றன. எஞ்சிய நீண்ட அலை நீளம் மிக்க சிவப்பு, மஞ்சள் நிற ஒளிக்கதிர்களே எஞ்சி நிற்கின்றன. இங்கு மஞ்சளும் சிதறடிக்கப்பட்டு விட்டது போலும், அதுதான் அதிக சிவப்பாகக் கதிரன் காட்சி அளிக்கின்றான்.
 
என் பதின்ம வயதுகளில் அந்திகளில் கல்லுண்டாய் வீதி வழியாகச் சைக்கிளில் அராலி வடக்கு நோக்கிப் பயணிக்கையில் , காக்கைதீவுக் கடலில் சாயும் செந்நிற அந்திக் கதிரவனை இரசித்துச் சென்றதை நினைவு படுத்தியது டொராண்டோச் சிவப்புச் சூரியன்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்