Tuesday, July 23, 2024

கவிதை: என் பிரியம் மிகு யாழ் மண்ணே! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=tzyYJGwBVZY

கவிதை: என் பிரியம் மிகு யாழ்  மண்ணே!  - வ.ந.கிரிதரன் -

என் யாழ் மண்ணே!
என் பிரியம் மிகு யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

நான் பிறந்த மண் நீ.
நான் தவழ்ந்த மண்.
நான் உருண்டு , புரண்ட மண் நீ.
நான் எழுந்த மண் நீ.
நான் இளமைக்கனவு கண்ட மண் நீ.
என் இனிய யாழ் மண்ணே!
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

எம் வரலாற்றின் சாட்சி
நீ.
ஆம்!
வரலாற்றில் நீ சந்தித்த
களங்கள், போர்க்களங்கள்
எத்தனை.
தாழ்ந்த போதெல்லாம்
மீண்டும் நீ
மேலெழுந்தாய்.
மேலெழுந்து
நிலைத்து நின்றாய்.
எரிக்கப் பட்ட போதெல்லாம்
எழுந்து நின்றாய்.
உறுதியுடன் உயர்ந்து நின்றாய்.
உத்வேகம் தந்தாய்.

இளம் பருவத்தில்
உளம் மகிழ்ந்து திரிந்தேன்
யாழ் மண் மீது.
மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

பண்ணைக் கடற்கரை,
புல்லுக்குளம்,
பொதுசன நூலகம்
முற்றவெளி,
மணிக்கூட்டுக் கோபுரம்

காட்சிகள் விரியும்
கண் முன்னே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

முற்றவெளித் தேர்தல் கூட்டங்கள்
மக்கள் திரண்ட தேர்தல் கூட்டங்கள்.

தானைத்தலைவர்,  அவர்
தாங்கிப் பிடிக்கும் தந்தை செல்வா
இரத்தப் பொட்டிடும்
இளவல்கள்

மனத்தில் மறக்க முடியாக் காட்சிகள்.
நினைத்துப் பார்க்கின்றேன்.
மண்ணே! யாழ் மண்ணே!
எப்படி
மறப்பேன் உன்னை.
எப்படி
மறப்பேன் உன்னை.

நகரில் திரிந்த பொழுதுகள்
நகரில் களித்த திரையரங்குகள்
நகரில் சுகித்த உணவகங்கள்
நகரில் அருந்திய பானங்கள்

றிக்கோ, சுபாஷ், பிளவுஸ்
லிங்கம் கூல் பார்
மொக்கங், ஆசாத் கபே
எப்படி
மறப்பேன் உன்னை.
எப்படி
மறப்பேன் உன்னை.

யாழ்ப்பாணம் என்றால்
யாழ்தேவி நினைவு வரும்.
யாழ்ப்பாணம் என்றால்
யாழ் கூழ் நினைவு வரும்.
கிடுகு வேலி நினைவு வரும்.
கிட்டிப்புள் நினைவு வரும்.
காற்றில் தலைவிரிக்கும் பனை,
கமுகு ,தென்னை நினைவு வரும்.
சுற்றம் கூவி அழைக்கும் ஊரின்
உற்ற நட்புக்காகம் நினைவு வரும்.

யாழ் மண்ணே.
என் பிரிய யாழ் மண்ணே.
எப்படி
மறப்பேன் உன்னை.
எப்படி
மறப்பேன் உன்னை.

யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.

என் தாய் மண்ணே! நீ வாழி.
என் தாய் மண்ணே! நீ வாழி.
நெடுங்காலம் நிலைத்து நின்றாய் நீ.
இனியும்
நெடுங்காலம் நிலைத்து நிற்பாய்.
யாழ்  மண்ணே! நீ வாழி.
யாழ்  மண்ணே! நீ வாழி.

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்