Monday, July 29, 2024

நகரைச் சுத்தமாக்குவோம். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SfMaqvmYcPs
    
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.

குப்பை கூளங்கள் போடாதீர்.
கிருமிகள்  பெருகிடச் செய்யாதீர்.
எப்பொழுதும் சுத்தமாக நகர்தனை
வைத்திருப்போம். நாம் வைத்திருப்போம்.

சூழலைப் பாதுகாப்போம். நாம்
சூழலைப் பாதுகாப்போம்.
சூழற் பாதுகாப்பு வாழ்வைச்
சீரமைக்கும், நலமாக்கும்.
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.

வாரத்தில் ஒரு நாள் இணைவோம்.
வாரி அள்ளுவோம் குப்பை கூளங்களை.
சிரம தானம் செய்வோம். நாம்
சிரம் தானம் செய்வோம்.

நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.
சுத்தமாக்க இணைவீர்.
சுத்தமாக்க இணைவீர்.


No comments:

பிரபலமான பதிவுகள்