Friday, July 26, 2024

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -




          - இசை & குரல்: AI SUNO

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=FeE8oTHqEhY

 

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை.

இயற்கையை எப்போதும் இரசிப்பவள்
நான்.
 
இரவுவானை, அதில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை
எத்தனை முறை இரசித்தாலும் உள்ளம் அடங்குவதில்லை.
இரவு முழுவதும் இரசித்துக் கொண்டிருக்கவும் முடியும்.
விடியும் வரை இரசித்துக் கொண்டிருந்ததும் உண்டு.


நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை

விரிந்து கிடக்கும் விண் பிரமிப்பு ஊட்டும்.
வான் உண்மையில் விரிந்து செல்லும் என்பது
என் நெஞ்சைக் கிளர வைக்கும் உண்மை.
எப்பொழுதும் வியக்க வைக்கும் உண்மை.

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை

புள்ளி ஒன்றில் இருந்து விரிந்த பிரபஞ்சமா?
புள்ளி ஒன்றில் இருந்து விரிந்த பிரபஞ்சமா?
பிரமிப்பால் என் உள்ளம் நிறைந்து விடும்.
பிரமிப்பால் என் உள்ளம் நிறைந்து விடும்.

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை

எத்தனை மரங்கள். எத்தனை எத்தனை உயிர்கள்.
அத்தனையும் என் நெஞ்சைப் பிரமிக்க வைக்கும்.
இத்தனையையும் இங்கு உருவாக்கி வைத்தது யார்?
எத்தனை முறை கேட்டும் பதில்கள் இல்லை.

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்