Saturday, July 27, 2024

வ.ந.கிரிதரனின் யு டியூப் சானல்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்'




இங்குள்ள யு டியூப் தளத்தில் எனது பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பாடல்கள். இத்தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன். இதன் ஆரோக்கியமான அம்சங்களை நான் மிகவும் வரவேற்கின்றேன்.

பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல்களை பல்வேறு இசை வடிவங்களில் அல்லது கலக்கப்பட்ட பல்வேறு இசை வடிவங்களீள், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இசை வடிவில், பல்வேறு வாத்தியங்களைப் பல்வகைகளில் கலந்து பாடல்களை உருவாக்க இத்தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. அது இத்தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று.

நாம் விரும்புகின்றோமோ இல்லையோ செயற்கை அறிவு (AI) இங்கு நிலைத்து நிற்கப்போகும் தொழில் நுட்பம். வரவேற்க உள் வாங்க, அவ்விதம் உள் வாங்கிப் பயனடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் நிலப்பிரபுத்துவம் சமுதாயத்தில் தனித்தனி மனிதர்களில், தமது தொழில்களில் திறமையுள்ள மனிதர்களால் மட்டுமே தொழில்களை ஆற்ற முடிந்தது. அந்நிலையை இயந்திரங்கள் மாற்றின. இணையம் வந்தது. இணையத்தின் பல்வகைத்தொழில் நுட்பங்கள் சாதாரண மனிதர்களையும் ஊடகவியலாளர்கள் ஆக்கியது. இன்று செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் வந்துள்ளது. வரவேற்போம். உள் வாங்குவோம். ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்துவோம். பயனடைவோம்.

என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவு இச் சானலைத் தொடர உத்வேகம் அளிக்கும். நன்றி.

என் பாடல்களுக்கான யு டியூப் சானல் - https://www.youtube.com/@girinav1

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்