Wednesday, July 17, 2024

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra

  - பாடலை முழுமையாகக் கேட்க - பாடல் - ஆசை - வ.ந.கிரிதரன் =

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.

பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.

 

No comments:

பெரியார், திராவிடம், தமிழ்மொழி பற்றி செயற்கை நுண்ணறிவுடன் விரிவான நேர்காணல். நேர்காணல் கண்டவர் : வ.ந.கி

நான்:  பெரியார் ஆரியர் தமிழ் மொழியைத் தம் மொழியைக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிரித்து விட்டதாகக் கருதுகின்றாரே? செயற்கை நுண்ண...

பிரபலமான பதிவுகள்