Monday, July 22, 2024

காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -


                                                          
- இசை & குரல் - AI SUNO -


- இக்கவிதை எனது பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை. -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=UIStyrjuX-4

கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை

காலத்தின் ஒரு திசைப் பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா?
ஆயின் 'அறிவுணர்'வுக்கு அது இல்லை.
ஆம்!
அது இல்லை.
எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.

தயக்கமெதுவற்று அதனால்
தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.

கண்ணம்மா!
நேற்று - இன்று - நாளை

காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில்
கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?

அங்கு அனைத்துமே
சம காலத்தில் இருப்பன.
அறிவாயா கண்ணம்மா!

காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை.
ஆம் ! அந்த நிலை.
என்
'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா? கண்ணம்மா!

காலவெளிச்சட்டங்களைக்
காவிச்செல்லும்
காலவெளிப் பிரபஞ்சத்தில்
காலவெளி மீறிப்பயணிக்க என்னால்
முடியுமடி கண்ணம்மா!

காலைதனை நீ அழகுபடுத்திய
காலவெளிச்சட்டத்துக்குள் கூட
என்னால் இன்றும் பயணிக்க முடியமடி
என் 'அறிவுணர்'வின் துணைகொண்டு.
கண்ணம்மா!

காலவெளியில்
ஒரு திசையில் பயணிக்கும்
பயணங்களை மீறிடும் பக்குவம் அல்லது
பலம் 'அறிவுணர்'வுக்குண்டு.
புரியுமா கண்ணம்மா!

காலவெளியை வளைப்பேன் கண்ணம்மா
என் 'அறிவுணர்'வினால் என்றால் நீ
நகைக்கக்கூடும்/. கண்ணம்மா!

ஆயின் அதுவோருண்மை.
நீயும்
அறியக்கூடும் அறிவின் துணைகொண்டு
கண்ணம்மா!

காலத்தை வரையறுக்கும்
ஆம் ஒரு திசையில்
காலவெளியில் கண்ணம்மா
காலவெளி மீறிடுதற்கு உதவிடும்
அறிவுணர்வே! நீ வாழி! கண்ணம்மா!

அறிவுணர்வு மிகுந்து,
காலவெளி மீறி,
காலமழித்துப் பயணிக்கும் எனக்கு
களிப்பே.  வேறுண்டோ கண்ணம்மா!

நான்
காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!
ஆம்!
காலவெளி மீறிய கவிஞனே நானடி கண்ணம்மா!

No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்