Sunday, July 28, 2024

அறிவுரை கூறு கண்ணா! - வ.ந.கிரிதரன் -

                                                            - இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=OXVWT6wJBhQ

காதல் வயப்பட பெண் ஒருத்தியின் உணர்வுகளை விபரிக்கும் கவிதை இது.

அறிவுரை கூறு கண்ணா!  - வ.ந.கிரிதரன் -

உன்னை மறப்பதற்கு முடியவில்லை.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

எத்தனை தடவை முயற்சி செய்தேன்.
அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரே.
கண்ணா,
விழலுக்கு இறைத்த நீரே.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.


அன்று உன்னை என் பார்வைத் துண்டில்
அகப்படுத்தி வைத்தேன்.
அது இன்னும் பத்திரமாக இருக்கிறது.
கண்ணா,
இருக்கிறது.

உன் புன்னகை பார்த்துப் பரவசம்  கொண்டேன்.
கண்ணா,
இன்னும் இருக்கிறது இதயத்தில்
அன்று கண்ட அந்த முகம்.
கண்ணா
அன்று கண்ட அந்த முகம்.

முகம் பார்த்து என் மோகம் தணிப்பேன்.
கண்ணா என்
மோகம் தணிப்பேன்.
என்றுனைப் பார்ப்பேன். கண்ணா,
என்றுனைப்பார்ப்பேன்.
இன்று உனை இப்போதே பார்ப்பின்
இன்பம் அதைவிட வேறு உண்டோ
கண்ணா,
இன்பம் அதைவிட வேறு உண்டோ?

காதல் என்றால் என்னவென்று கண்ணா
கண்டு கொண்டேன் உன் மூலம் கண்ணா.
காதலற்ற வாழ்வில் இனிமை இல்லை.
கண்ணா, உணர வைத்தாய் எனக்கு.
கண்ணா, உணர வைத்தாய் எனக்கு.

என்றுனைக் காண்பேன் கண்ணா.
என்று உன்னுடன் உரைப்பேன் கண்ணா.
அன்று வரை நானெப்படி இருப்பேன் கண்ணா.
நன்று இதற்கோர் அறிவுரை கூறின் கண்ணா.
இன்றே இப்போதே கூறு கண்ணா.
கூறு கண்ணா.



No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்