Sunday, July 21, 2024

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு! - வ.ந.கிரிதரன் -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=csE3biZ4O7U

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு!  - வ.ந.கிரிதரன் -


         - இசை & குரல் - AI SUNO -


அராலிப் பாலத்தின்
அடியில்
காக்கைதீவுக் கடலுடன்
கலக்கிறது
வழுக்கையாறு.
வழுக்கியாறு.

வான் பார்க்கும் யாழ் மண்ணே.
வளம் சேர்க்கும் வழுக்கியாற்றால்
வரலாற்றுப் பெருமை உற்றாய்.
வரலாற்றுப் பெருமை உற்றாய்.

வழுக்கியாறுக்கு ஒரு
வரலாறுண்டு.
அது
தமிழர் தம் வரலாறு.
தமிழர் தம் வரலாறு.
ஆம்! தமிழர்தம் வரலாறு..

தெல்லிப்பளை, அளவெட்டி,
சங்கானை, நவாலி,
வழி வந்து அராலிக்
காக்கைதீவுக் கடலில்
கலக்கும் ஆறு
வழுக்கியாறு
வழுக்கையாறு.

கந்தரோடை கதிரைமலையாகக்
கோலோச்சிய காலம்.
அன்று
கோலோச்சிய ஆறு
வழுக்கியாறு.
அன்று
வழுக்கியாறு பேராறு.
வர்த்தகப் படகுகள் பாய்
விரிக்கும் பேராறு.

நாவாய்கள் வந்தடையும்
நாவாந்துறை!
சங்கடம் தோணிகள்
கதிரைமலை நாடிப்
பொருள் ஏற்றிச் செல்லும்.

படகுகள் செல்லும்
பேராறு வழுக்கியாறு.
படகுகள் செல்லும்
பேராறு வழுக்கியாறு.

சங்கடம் தோணிகள்
நாவாந்துறையிலிருந்து
பயணித்தன.
பயணித்ததால்
சங்கட நாவாந்துறை என்பார்
சரித்திர ஆய்வாளர் ராசநாயகம்.

வழுக்கியாறு
வரலாற்றுப் பெருமை மிகு
வழுக்கையாறு

கதிரைமலை ராஜதானி
காட்சிகள் விரியும்..
வியக்க வைக்கும்.
வரலாற்றை
விளம்பி நிற்கும்.

வழுக்கியாறு
வரலாற்றுப் பெருமை மிகு
வழுக்கையாறு

வரலாற்றில் தெளிவில்லை.
வழுக்கியாறு தெளிவு தரும்.
வரலாற்றுப் பெருமைகளை
அறிய வைக்கும்.
ஆம். அறிய வைக்கும்
ஆவணம் வழுக்கியாறு.



No comments:

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்