Saturday, July 27, 2024

பாரதியின் பாட்டென்றால் - வ.ந.கிரிதரன் -



    - இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க -= https://www.youtube.com/watch?v=HPU7g2yNoSI

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

இருப்புக்கு வழி காட்டும் பாடல்கள்.
விருப்பை மானுட விருப்பை வெளிப்படுத்தும்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்று
அன்று அவன் சொன்ன அறிவுரை.

உளவியலை உணர்ந்தவன் பாரதி
மானுட
உளவியலை உணர்ந்தவன் பாரதி.

'அச்சமில்லை. அச்சமில்லை, அச்சமில்லை' என்றான்.
அகத்தில் நிலைக்க வைக்கும் சுய மந்திரமல்லவா
அடுத்தடுத்து ஒன்றை உரைப்பது.

உளவியலை உணர்ந்தவன் பாரதி
மானுட
உளவியலை உணர்ந்தவன் பாரதி.

சூழலை மீறிச் சிந்தித்தவன் பாரதி.
சூழ  இருந்த மடமைகளைச் சாடியவன் பாரதி.
மண்ணில் மானுட விடுதலைக்காய்,
மடமைகளின் விடுதலைக்காய்,
பெண் விடுதலைக்காய், தீண்டாமைப்
பிரிவுகளின் விடுதலைக்காய்ப்
பாடியவன் பாரதி. என் பாரதி.

இயற்கையை நேசித்தான்.
இன் அன்பினைப் போதித்தான்.
இருப்பின் அர்த்தம்தனை யோசித்தான்.
இவனைப் போல் வேறு யாருளர்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு.
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

காதலைப் பாடினான்.
கலைகளைப் பாடினான்.
மானுட ஆளுமைகளைப் பாடினான்.
மதங்களைப் பாடினான்.
இருப்பிலுள்ள அனைத்தையும் பாடினான்.
இல்லாதவை பற்றியும் பாடினான்.
மானுட வழிகாட்டிகள் இவன் பாடல்கள்.
மானுட வழிகாட்டிகள் இவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.



No comments:

'பதிவுகளி'ல் அன்று (மார்ச் 2006 இதழ் 75 ) - 'வாழும் சுவடுகள்': தமிழ் இலக்கிய உலகிற்கொரு வித்தியாசமான புது வரவு! - வ.ந.கிரிதரன் -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள...

பிரபலமான பதிவுகள்