Tuesday, July 9, 2024

ஓவியம் பேசினால்...


நியூயோர்க் மாநகரத்து வீதி ஓவியர்  எண்பதுகளில் என்னைப்பார்த்து வரைந்த ஓவியம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவமொன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்கும் என்ற  கற்பனையின் விளைவு இது.

எழுத்தாளர் மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), எம் பால்ய பருவத்தில் இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்தது. அதனால் அவ்வாசிப்பனுபவம் இன்றும் எம் நினைவுகளில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கிறது,மாயாவியின் நாவல்கள் பல கல்கியில் வெளியாகியுள்ளன. ராணிமுத்துப் பிரசுரமாக வாடாமலர் நாவல் வெளியாகியுள்ளது. ஆனால் எம்மைப்பொறுத்தவரையில் அவரது மிகச்சிறந்த படைப்பாக இந்த மொழிபெயர்ப்பு நாவலையே கூறுவோம்.  அவ்வளவுக்கு அப்பருவத்தில் விரும்பி வாசித்தோம்.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்