Thursday, July 4, 2024

கவிதை: ஜிம்மி - வ.ந.கிரிதரன் -


ஜிம்மி! முதலில் நினைவுக்கு வருவது
பபா வீட்டு ஞமலி!
பபா என் பால்ய காலத்து நண்பன்.
பபா பற்றி நினைத்ததும்
ஜிம்மி பற்றிய நினைவுகளும் வந்து விடும்.
உடும்பு
பிடிப்பதில் பிரியமும், வல்லமையும்
ஜிம்மிக்கு உண்டு.
எப்பொழுதும் பபாவின் முன்
வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் ஜிம்மியின்
தோற்றம் இன்னும் நினைவில் மங்கிவிடவில்லை.
உடும்பின் ஈரலை அதன் மூக்கில் பபா பூசி விடுவான்.
அது ஒன்று போதும் ஜிம்மிக்கு.
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓடும்
ஜிம்மிக்குப் பின் நாமும் ஓடுவோம்.

மூக்கிலிருக்கும் உடும்பீரலின் மணம் போதும்
ஜிம்மிக்கு.
உடும்பு எங்கு பதுங்கியிருந்தாலும்
எப்படியென்றாவது கண்டுபிடித்துவிடும் ஆற்றல்
ஜிம்மிக்கு உண்டு.
ஜிம்மிக்குப் பின் ஓடி நாம் களைத்தாலும்
ஜிம்மி களைப்பதில்லை.

அண்மையில் பபாவைக் கண்டபோது
ஜிம்மி மீண்டும் நினைவுக்கு வந்தது.
பபா கூட மறந்திருக்கலாம்
ஜிம்மியை, ஆனால் நான் மறக்க மாட்டேன்
ஜிம்மியை.
ஏனென்றால் எனக்குப்
'போட்டோகிராபிக் மெமரி' என்று
எல்லாரும் கூறுவதை
நான் அறிந்திருக்கென்றேன்.
ஒருவேளை நீங்கள் அறியாதிருக்கலாம்.

girinav@gmail.com

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்