Monday, July 29, 2024

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா. - வ.ந.கிரிதரன் -


 


- இசை & குரல்; AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iMsm8VIEsSY

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

எதை நீ கேட்டாலும்
எதை நீ வாசித்தாலும்
அதை நீ அப்படியே
நம்பி விடாதே நண்பா.
நம்பி விடாதே நண்பா.

பகுத்தறிந்து பார்  முதலில்.
பின்பு முடிவு செய் நண்பா.
பகுத்தறிவு சரி பிழை காட்டும்.
பகுத்தறிவு உண்மை  பொய் காட்டும்.
பகுத்தறிவு ஏற்றம் தரும். இங்கு
பகுத்தறிவு மாற்றம் தரும்.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

மனிதருக்கு மேன்மை பகுத்தறிவால் நண்பா..
புனிதர் அவர் ஆவதும் பகுத்தறிவால் நண்பா.
இனி நீ வாழ்வை மாற்றி விடு.
எனின் பகுத்தறிவு உனை ஏற்றி வைக்கும்.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.
பகுத்தறியும் பண்பை வளர்த்து விடு.
பகுத்தறியும் பண்பை வளர்த்து விடு.

கேள்வி கேட்பது பகுத்தறிவின் தன்மை.
கேள்வியற்ற வாழ்வு தாழ்வின் தன்மை.
நண்பா.
பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

நினைத்தது நடக்க வேண்டும் என்றால்
அனைத்தையும் பகுத்து அறி நண்பா.
நம்பும் எதனையும் நம்பு பகுத்தறிந்தே.
நண்பா நம்பு பகுத்தறிந்தே.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

No comments:

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!

நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்...

பிரபலமான பதிவுகள்