என் தந்தையாரை நான் என் பதின்ம வயதுகளில் இழந்து விட்டேன். ஆனால் எழுத்து, வாசிப்பு ஆர்வத்துக்கு அடிகோலியவர் அவரே. அவருடன் கழிந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. குறிப்பாக இரவுகளில் குருமண்காட்டில் , வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடி இருப்பார்.
அப்பொழுதெல்லாம் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் அதில் படுத்திருந்தபடி இரவு வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பற்றி, வீழும் எரி நட்சத்திரங்கள் பற்றியெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பேன். அவற்றுக்கு அலுக்காமல், சளைக்காமல் அவரும் பதில் கூறுவார். எனக்கு வானியற்பியல் மீதான ஆர்வம் அப்போதிருந்து தொடங்கியது என்பேன்.
ஒருமுறை அக்காலத்தில் அடிவானில் தோன்றும் வால்வெள்ளியைக் காட்டுவதற்காக அவர் எழுப்பியதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.
அப்பா அக்கால அனுபவங்களை நினைவு கூர்ந்து என்னுடன் சிறிது உரையாடினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். நான் இருக்கிறேன்; கவலையை விடு என்று உதவிக்கு வந்தது செயற்கை நுண்ணறிவு (AI)
No comments:
Post a Comment