Wednesday, July 31, 2024

நாங்கள் கவிகள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை..  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!அவலங்கள் கண்டு  சிந்தைகள் கனன்று
துடிக்கையிலே
புயலாகச் சீறியெழும் நாங்கள் மிகவும்
அமைதியானவர்கள்
இயற்கையாசானின் இரகசியங்களை அறிந்திட்ட
சீடர்களே நாம்.

எம் நெஞ்சத்துலைகளில் கொதித்திடும்
சிந்தனை அணுக்கருக்கள்
ஒரு நாள் ஒன்று திரண்டு
ஆக்க அணுகுண்டுகளாக வெடித்தெழும்

அவ்வேளை - சீறியெழும்
செயற் கதிர் வீச்சுகள்
முன்னால் சமுதாயத்தின்
பொய்மைக்கரங்கள்
பொசுங்கிக் கருகும்
எழும் அனற்காற்றில்
ஏற்றத்தாழ்வரக்கர்
நிலைகுலைந்து போவர்
தோன்றிடும் ஆற்றலில்
எழுந்து நிற்கும் ஏற்றமொன்றில்
இவ்வுலகம் பொங்கிச் சிரிக்கும்.

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!


No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்