Wednesday, July 24, 2024

மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை எனது முதலாவது கவிதைத்தொகுப்பான , மங்கை பதிப்பக வெளியீடாக கனடாவில் வெளியான 'எழுக அதிமானுடா' தொகுப்பில் உள்ளது.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DgKD70RyBW0

 
மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -
 
பனிமழை பொழிந்து,
பாதையெல்லாம் ஒரே சறுக்கல்.
ளிரோ உடலைக்
குற்றியபடி ஒரே
குதியாட்டம்.

Toronto' மாநகரின்
அழகானதோர் அவென்யு
யூனிவர்சிட்டி அவென்யு.
அகன்ற சாலை,
அதன் நடுவே
அழகான் சிலைகள்,
நீரூற்றுகள், மரங்கள்..இருபுறமும் உயர்ந்து
இலங்கும் கட்டடப்பரப்புகள்.

சிலையொன்றின்
அடிப்புறத்தே...ஆதிமனிதர்கள்
சிலரை நீங்கள்
சந்திக்கலாம்.

ஆண், பெண் பேதமின்றி
அணைத்தபடி ஒருவரையொருவர் ஒன்றாக
அணைத்தபடி
கந்தலுடன் தழுவலின் கணச்சூட்டில்
தம்மை மெய்ம்மறந்தபடி..இருப்பார்கள்.
யாரிவர்கள்?
யாரிவர்கள்?

நகரில் திரியும்
நாடோடிகளா?

இவர்களுக்கு வீடு,
இவர்களுக்கு வாசல்,
இவர்களுக்குக் குடும்பம்,
இவர்களுக்குக் குழந்தை
என்று எதுவுமேயில்லையா?
யாரிவர்கள்?

இவர்கள் நாடிழந்தவர்கள்.
இருந்த மண்ணிழந்தவர்கள்.

இவர்களுக்கென்றொரு கலை,
இவர்களுக்கென்றோரு கலாச்சாரம்,
இவர்களுக்கென்றொரு பண்பாடு,
இவர்களுக்கென்றோரு நாகரிகம்,
எல்லாமேயிருந்தன ஒரு காலத்தில்.

அன்று
கொடிகட்டிப்பறந்தவர்கள்
இன்று
இடிபட்டுச்சிறுப்பவர்கள்.
இவர்கள்தாம்
இந்நாட்டின், இம்மண்ணின்
உண்மையான மைந்தர்கள்.

இவர்களது
உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால்,
இவர்களது
உரிமைகள் கொடுக்கப்படாவிட்டால்,
இன்று இழந்தவர்கள்!
நாளை எழுந்தவர்கள்.

மேப்பிள் மண்ணின் உண்மை
மைந்தர்கள் இவர்கள்தாம்.
ஆம்.
இவர்கள்தாம்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்