Tuesday, July 30, 2024

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=o3WH-tw_A4Q

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை!  - வ.ந.கிரிதரன் -
 
மனத்தில்  தெரிகிறது.
மொக்கங் கடை
யாழ்ப்பாணத்தின்
மொக்கங் கடை

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாணமண்ணின்
மொக்கங் கடை.

கொத்து ரொட்டியென்றால்
எமக்கு
மொக்கங் கடை தானே.

மொக்கன் கடை என்றே
மக்கள் அழைப்பர்.
எனக்கோ அது என்றுமே
மொக்கங் கடை.

மொக்கங் கடை என்றே
முகப்பு விளம்பரத்தில்
பார்த்த நினைவு.

நினைவு பொய்யோ
நினைவு மெய்யோ
நிலைத்து விட்டது
நினைவில் மொக்கங் கடை
என்றே.
என் நினைவில்
மொக்கங் கடை
என்றே.

யாழ்ப்பாண ஐந்து சந்திக்கு
அண்மையில் ஒரு தெரு.
அங்கு அமைந்திருந்தது
அந்த மொக்கங் கடை.நண்பருடன் றீகலில்
நான்ஆங்கிலப் படம்
பார்க்கும் சமயங்களில்
போக மறப்பதில்லை
மொக்கங் கடைக்கு.

மொக்கங் கடையென்றால்
முதலில் மனத்தில்
மலர்வது கொத்துரொட்டியே.

கொத்துரொட்டியை நான்
அறிந்தது அங்குதான்.
அறிந்தது அங்குதான்.

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாண மண்ணின்
மொக்கங் கடை.

மண்ணில் நாம் முஸ்லிம்
மக்களுடன் இணைந்து வாழ்ந்த
காலத்தின் ஒரு குறியீடு
மொக்கங் கடை.

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாண மண்ணின்
மொக்கங் கடை.

மொக்கங் கடை என்றால்
மனத்தில் சிறகடிக்கும்
சிந்தனைக் குருவிகள்.

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாணமண்ணின்
மொக்கங் கடை.


No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்