Friday, July 26, 2024

சுயமரியாதை இழக்காதே தோழா! - வ.ந.கிரிதரன்


- இசை & குரல்: AI SUNO  -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=7sTQsfrXv-o&feature=youtu.be

சுயமரியாதை இழக்காதே  - வ.ந.கிரிதரன் -

காலப்பெருங்கடலில் சிறு துளி
ஞாலத்தில் நம் இருப்பு.

சுயமரியாதை இழக்காதே  ஒருபோதும் தோழா.
சுயமரியாதை இழக்காதே ஒருபோதும்  தோழா!
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
தோழா. ஒரு போதும்.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

அற்ப விருப்புகளுக்காக
ஆடுவர் சக மனிதர்.
அடி வருடிப் பிழைப்பவர் அவர்.
சொல்லொன்று
செயலொன்று
என வாழும் அவரை
எள்ளி நகையாடு தோழா!
எள்ளி நகையாடு தோழா!

இழப்பதற்கென்று இங்கு எதுவுமில்லை,
தோழா. எதுவுமேயில்லை.
இருக்கும் வரைதான் எல்லாம்.
இல்லாவிட்டால் எதுவுமேயில்லை.


உலகில் நிலைத்து நிற்பவை
உன் எண்ணங்கள் மட்டுமே தோழா.
உன் உடமைகள் அல்ல. தோழா.
உடல் அழியும்.
உடமைகள் அழியும்,
வரலாற்றில் வெகு தூரம் கூட
வரும் உன் சிந்தனைகள் மட்டுமே தோழா.

இளங்கோவின் அறச்சீற்றம்
காவியமானது தோழா.
காலத்தில் நிலைத்து
இன்னும் இருக்கிறது தோழா.
இன்னும் இருக்கிறது தோழா.

வள்ளுவர்தன் அறிவுரைகள் தோழா
இன்னும்]
வாழ்வுக்கு வழி காட்டுகின்றன தோழா.
வழி காட்டுகின்றன.

பாரதி இன்றில்லை தோழா.
பாடலை, அவன் கவிதையைப்
பாடிக்கொண்டு தானிருக்கின்றோம் தோழா.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

No comments:

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்