Monday, July 22, 2024

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUMO -

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ள கண்ணம்மாப் பாடல்களில் ஒன்றினைக் கண்ணம்மா பாடினால் எப்படியிருக்கும் என்னும் கற்பனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=iEj0_QOzz_o

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார்
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணா
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணா?
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

பெருவெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணா?
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

இவ்விதம் இருப்பதில்,
இவ்விதமெண்ணி
இருப்பதிலுள்ள சுகம் நீ அறிவாய்தானே
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

கண்ணா!
இவற்றை
இங்கெழுப்பியது முதலில் நீதானே
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

உன் புரிதல் வேறு.
என் புரிதல் வேறு.
ஆயினும்
அவை நாணயமொன்றின்
பக்கங்கள்தாமே
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

எனக்கும் தெரியும்,
உனக்கும் புரியும்
அது எதுவென்று.
எது அது? அது
ஓவியத்துக்
காட்சிக் கூறுகள் நாமென்பது.
அதுதான் அது.
ஓவியத்துக் கூறுகள் நாம்
இல்லையா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

ஓடுவதற்கு ஓரிடமுண்டா கண்ணா?
ஒளிவதற்கு ஓரிடமுண்டா கண்ணா?
ஓவியத்தெல்லைகளை
ஓடிக் கடப்பதற்கு
ஓரிடமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

No comments:

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். இலங்க...

பிரபலமான பதிவுகள்