Monday, July 22, 2024

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUMO -

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ள கண்ணம்மாப் பாடல்களில் ஒன்றினைக் கண்ணம்மா பாடினால் எப்படியிருக்கும் என்னும் கற்பனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=iEj0_QOzz_o

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார்
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணா
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணா?
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUMO -

கவிதை; நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா!
- வ.ந.கிரிதரன் -


இக்கவிதை பதிவுகள் இணைய இதழில் வெளியானது, எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது. பாடலில் ஒரிரு மாற்றங்களைச் செய்துள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=g-_6ddLZ2ew

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பெருவெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணம்மா!
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்


 

- இசை  & குரல் - AI SUNO -

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல் ; AI SUNO -

 YouTube: https://www.youtube.com/watch?v=TIRjgTtM284


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

Sunday, July 21, 2024

எனது யு டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!

 
                                 எனது யு டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!
                                 இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு! - வ.ந.கிரிதரன் -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=csE3biZ4O7U

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு!  - வ.ந.கிரிதரன் -


         - இசை & குரல் - AI SUNO -


அராலிப் பாலத்தின்
அடியில்
காக்கைதீவுக் கடலுடன்
கலக்கிறது
வழுக்கையாறு.
வழுக்கியாறு.

வான் பார்க்கும் யாழ் மண்ணே.
வளம் சேர்க்கும் வழுக்கியாற்றால்
வரலாற்றுப் பெருமை உற்றாய்.
வரலாற்றுப் பெருமை உற்றாய்.

வழுக்கியாறுக்கு ஒரு
வரலாறுண்டு.
அது
தமிழர் தம் வரலாறு.
தமிழர் தம் வரலாறு.
ஆம்! தமிழர்தம் வரலாறு..

Saturday, July 20, 2024

பாடல்; யாழ் இந்து நினைவுகள் - வ.ந.கிரிதரன் -

         - இசை & குரல் - AI SUNO -
 

பாடல்; யாழ்  இந்து நினைவுகள் -  வ.ந.கிரிதரன் -


வானம் தெரியும் ஜன்னல்.பார்த்தபடி
மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றேன்.
ஆழ்ந்தபடி அசை போடுகின்றேன்.
அன்று நான் படித்த யாழ் இந்துவை.

யாழ் இந்துவென்றால் பல நினைவு.
யாழ் இந்துவென்றால் பல நினைவு.

விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிகள்
வலம்  வரும் நினைவுச் சுழலில்.
துடுப்பெடுத்தாட்டம்  , உதைபந்தாட்டம்
இரண்டுமே இன்பம்  தந்த
இனிய நாட்கள்.

குகன், சூரியின் ஹிட்ஸ்
வேகப்பந்து வீச்சாளன் நிருத்தானந்தன்
வசந்தன் டட்டடாங்

கீப்பர் புவிராஜசிங்கம், பாபு,
கோல் கீப்பர் தில்லை,
நீளம்  பாய்தலில்,
நீண்ட தூரம்  shot put
ஈட்டி எறிதலில்
இன்றும்
நினைவில் நிற்கும்
நரேனின் சாதனைகள்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...