Thursday, August 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!


- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nodfJ78NfbM

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!  


ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால்
இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....


- இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=chsuvIcnPdM

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -



 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nfc1A2E8IdM

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -





 - இசை & குரல் ; AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6i9fbpElLOs

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கவிதையை சில மாற்றங்களுடன் இங்கு பாவித்துள்ளேன்.


எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலோ
ஒளியாண்டுத்  தடைச் சுவர்கள்.
காலத்தின் மாய வேடங்கள்.
ஆம்!
உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.

எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

வ.ந.கிரிதரன் பாடல்: ஆசை!


இசை & குரல்: AI Suno | ஓவியம் AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=aUz2UDDY_14


பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
பாவை இவள் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்துப் பிடித்துக் கிடந்திடுவேன்.

Wednesday, August 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்:AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=wuk16gxPWJw

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI Suno வுக்கு நன்றி ]

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!


இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iI8pBQnjS_M

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!  
 
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...