Wednesday, February 26, 2025

எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -


எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான  உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என் படைப்புகளின்  ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.

இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில் கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.

செயற்கை அறிவினை மானுடர் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

சிறுகதைகள்:

கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s

நாவல்கள்

அமெரிக்கா (America) -

https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan

குடிவரவாளன் (An Immigrant)

https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg    
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan

Tuesday, February 25, 2025

சிறுகதை: மான்ஹோல் - வ.ந.கிரிதரன்

 

கனடாவிலிருந்து வெளிவந்த 'தேடல்' சஞ்சிகையில் வெளியான எனது சிறுகதை 'மான்ஹோல்' . அச்சிறுகதையினை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன்.

மேற்படி  சிறுகதையைப்பற்றி Google NotebookLM இன் செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் உரையாடுகின்றார்கள். அவ்வுரையாடலே இங்குள்ள காணொளி.

எனது யு டியூப் சானலான V.N.Giritharan Podcast இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளியிது. 

சிறுகதையை வாசிக்க - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/manhole-v-n-giritharan-translation-by-latha-ramakrishnan/




 

Sunday, February 23, 2025

எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast'


நண்பர்களே! V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலை ஆரம்பித்துள்ளேன்.
இங்கு 'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் பதிவேற்றப்படும். 
 
இங்கு எனது எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்புகளை மையமாக வைத்து ,செயற்கை அறிவினால் உருவாக்கப்பட்ட இருவரின் உரையாடல்கள்  இடம் பெறும். 
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast
 


 

Friday, February 21, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'



உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.


அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.

இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.

Tuesday, February 18, 2025

அறிஞர் அண்ணாவின் உரை: இந்தி இணைப்பு மொழியாக இருக்க முடியுமா?


அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.
இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். 
 
இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். 

Monday, February 17, 2025

ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி.....

 - ஆய்வாளர் மன்னர் மன்னன் -


அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன்.  ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது.  Saattai  யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச்  சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப்  பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68

சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.

Saturday, February 15, 2025

பெரியார் என்னும் மகா மனிதர்!


பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..

அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்து வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.

சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கியது?

வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...