அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.
இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார்
என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள்.
இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை
யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும்.
அண்ணாவுக்குப் பிறகு இவ்விதமானதோர் ஆளுமையைத் தமிழ் நாடு காணவில்லை. அதனால்தான் அன்று அண்ணாவின் மறைவின்போது தமிழகமே திரண்டு வந்தது. அது ஒரு உலக சாதனை என்று கின்னஸ் பதிவு செய்திருக்கின்றது.
அண்ணாவின் உரையினைக் கேட்க - https://www.youtube.com/watch?v=IMYRMugZxfM
*******************************************************************************************
அண்ணாவின் வாழ்வில் நடந்த இன்னுமொரு சுவை8யான சம்பவம்..
அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும்
மிகுந்த புலமை மிக்கவர். அவரது ஆங்கிலப் புலமையினை வெளிப்படுத்தப் பல
சம்பவங்களைக் கூறுவர். அண்மையில் இணையத்தில் அவரைப்பற்றி ஒரு தகவலை
அறிந்தேன். அது வருமாறு:
ஒரு முறை இங்கிலாந்தில் நடந்த
கூட்டமொன்றில் அண்ணா கலந்திருக்கின்றார். அப்போது மேடையில்
உரையாற்றிக்கொண்டிருந்தார் அவையோரைப்பார்த்து யாராவது Complete ற்கும்
Finishedற்குமிடையிலான வேறுபாட்டை கூற முடியுமா என்று
கேட்டிருக்கின்றார்கள். அவையோர் பலரும் இரண்டும் ஒன்றுதான்
என்றிருக்கின்றார்கள்.
அப்போது அவையிலிருந்த அண்ணா எழுந்து மேடைக்குச் சென்று பின்வருமாறு கூறினாராம்:
"ஓருவன்
சரியான பெண்ணைத் திருமணம் செய்தால் அவனது வாழ்க்கை Complete. அவன் தவறான
பெண்ணைத் திருமணம் செய்தால் அவனது வாழ்க்கை finished. அந்தச் சரியான்
பொண்ணு அவனை அந்தத் தவறான பொண்ணுடன் பிடித்து விட்டால் அவனது வாழ்க்கை
Completely finished"
அதுதான் அண்ணா! அறிஞர் அண்ணா!
No comments:
Post a Comment