Friday, February 7, 2025

வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'


பகுத்தறிவுக்  காவலன்  பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.

பகுத்தறிவுக்  காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.வர்ணப் பிரிவுகள் வேண்டாம் என்றார்.
வாழ்க்கையில் சமத்துவம் வேண்டும் என்றார்.
தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்றால்
தன் மரியாதை, சமநீதி வேண்டும் என்றார்.

பகுத்தறிவுக்  காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

மக்களுக்காய் வாழ்ந்த தலைவர் பெரியார்.
மாமனிதர் பெரியாரை இகழ்வார் சிறியார்.
பிரிவுகளைக் கடந்து நின்றவர் பெரியார்.
பிரித்துப் பார்ப்பவர் அவரை சிறியார்.

பகுத்தறிவுக்  காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.


No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்