Wednesday, February 5, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!


இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI


இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமேதெரியும் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
எரி நட்சத்திரங்கள் கிளர்ச்சி தரும்.
தொலைவுகளில் எத்தனை எத்தனை உலகங்களோ?
மலைப்பைத்  தரும் சிந்தனைகள் தொடரும்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

எத்தனை தரம் பார்த்தாலும் இன்பம்
அத்தனை தரமும் ஊற்றெடுத்துப் பெருகும்.
இரவு வானும் , சுடரும் , மதியும்
இருப்பின் நேர்த்தியை எடுத்தே உரைக்கும்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

இரவு வானை இரசித்துக் கொண்டே
இருப்பதில் நேரம் போவதும் தெரிவதில்லை.
விண்ணின் விந்தையைக் காட்டும் இரவுவான்.
தண் உணர்வு நெஞ்சை வருடும்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
இரவு வானின் இரசிகை நான்.
இரவு வானின் இரசிகை நான்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!

இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI இரவு வானை இரசிப்பதில் எனக்கு இன்பமே என்றும் பேர் இன்பமே விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள் வியப்பை...

பிரபலமான பதிவுகள்