ஐக்கிய திராவிடம் - விவேகி - யூலை 1947இல் வெளியான நூல். இதிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்கள் பெரியார் ஈ.வெ.ரா, திராவிடக் கழகம், பிரிவினையும் ஐக்கியமும் முக்கியமானவை. வாசித்துப் பாருங்கள். ஜூல 1, 1947 நாளைத் திராவிடப் பிரிவினை நாளாகப் பெரியாரின் கட்டளைப்படி கொண்டாடியதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.
பெரியார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையை வெறுத்தார். கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்கெதிராக நடந்த சத்தியாக்கிரகத்தில் மனைவி நாகம்மையுடன் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கின்றார்.
அப்பொழுது காங்கிரசில் இருந்த பெரியார், காங்கிரசில் நிலவிய ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக விலகி சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்துக் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது குடியரசு பத்திரிகையை ஆரம்பித்து மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டுகின்றார்.
எகிப்தும், கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜேர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் , பிரெஞ்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றார். அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.
ரஷ்யாவில் நீண்ட நாட்கள் தங்கி அங்கு நிலவிய சமதர்ம ஆட்சி பற்றி அறிந்து கொள்கின்றார். அரச விருந்தினராகத் தங்கி அங்குள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்க்கின்றார். சுய மரியாதை இயக்கக்கொள்கைகள் பற்றி ரஷ்ய மக்கள் மத்தியில் உரையாற்ற்ய்கின்றார்.
நாடு திரும்பிய பெரியார் சுய மரியாதை இயக்கக் கொள்கையுடன் சமதர்ம இயக்கக் கொள்கையையும் இணைத்துக்கொள்கின்றார். பொதுவுடமைத் தத்துவத்தைப் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்கின்றார்.
இந்தியாவில் முதன் முத்லாகப் பொதுவுடமைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்கள் ஹசரத் மோகானி, சிந்தனைச் சிற்பி எம். சிங்காரவேலு & பெரியார் ஆகியோரே.
பொதுவுடமைப் பிரச்சாரத்தின் காரணமாகப் பெரியார் பல தடவைகள் சிறை செனறார். ஜெயப்பிரகாச நாராயணன் ஈரோடு சென்று பெரியாரைச் சந்தித்து மீண்டும் காங்கிரஸில் சேருமாறு வேண்டுகின்றார்.
நீதிக் கட்சியினர் பெரியாரைத் தம் கட்சியில் சேர வேண்டுகின்றனர்.
ராஜாஜி பெரியாரைக் காங்கிரசில் சேர்ந்து ஒத்துழைக்குமாறு கோருகின்றார். அவரும் பெரியாரும் உருவாக்கிய சீர்திருத்தத்தைக் காந்தி ஏற்க மறுத்து விடுகின்றார். பெரியாரின் சீர்சிருத்தத் திட்டத்தை நீதிக் கட்சியினர் ஏற்றுக்கொள்கின்றனர். அதனால் பெரியார் நீதிக் கட்சியில் சேர்கின்றார்.
இந்தித்திணிப்புக்கெதிராக 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் நூலை வெளியிட்டு கடுமையான சிறைத்தண்டனை அடைகின்றார்.
1938இல் நீதிக்கட்சியினர் பெரியாரைத தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்பொழுது பெரியார் தன் இந்தி எதிர்ப்பு காரணமாகச் சிறையிலிருக்கின்றார்.
திராவிட நாட்டுப் பிரிவினைக்காகப் பிரச்சார்ம் செய்கின்றார்.
1944இல் நீதிக் கட்சிக்கு திராவிடர் கழகம் என்ரு பெயர் சூட்டப்படுகின்றது.
இவ்விதம் பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் விவேகியின் ஐக்கிய திராவிடம்.
இன்று திட்டமிட்டபடி பெரியார் மீது சேறு பூசப்படுகின்றது. சமூக ஊடங்களில் போலி ஆய்வாளர்கள் நிறைந்து விட்டனர். வரலாறு தெரியாதவர்கள் எல்லாரும் அரசியல் தலைவர்களாக வந்து விட ஆசைப்படுகின்றார்கள். பொய்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் இணையத்தின் ஆரோக்கியமான பக்கம் வரலாற்று உண்மைகளையும் தாங்கிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன என்பதை இப்போலி ஆய்வாளர்கள் உணர்வதில்லை. பாவம் , அவர்கள்.
' ஐக்கிய திராவிடம்' நூலை வாசிக்க - https://ia904501.us.archive.org/23/items/kmm-0457-aikkiya-thiravidam-1947/KMM0457-AikkiyaThiravidam-1947.pdf
No comments:
Post a Comment