Tuesday, February 11, 2025

ஏ தாழ்ந்த தமிழகமே!


அறிஞர் அண்ணா 1945இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தைத்திறந்து வைத்து ஆற்றிய உரை. இது 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா திறமையான பேச்சாளர். சிந்தனையாளர். ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடுகளாக, தர்க்கச் சிறப்பு மிக்கவையாக அவரது உரைகள் இருக்கும். 1947 தொடக்கம் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்கும் வரையிலான காலகட்டம் தமிழகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் மத்தியில் முக்கியமான காலகட்டம் .

சம்த்துவம், சுயமரியாதை, சம்நீதி, பகுத்தறிவு இவற்றை மையமாகக் கொண்டு திமுக இயங்கியது. கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்த வேறொரு கட்சி திமுக  போன்றேதும் உண்டா? தெரியவில்லை.

சினிமா, நாடகம், நாவல்ம் கட்டுரை என்று கலை, இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தம் கருத்துகளைப் பரப்பினார்கள்.  சினிமாவைப் பொறுத்த வரையில் திமுகவை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், உரைகளுக்கு பெரும்பங்குண்டு. எம்ஜிஆருக்கு முக்கிய பங்குண்டு. கலைஞரின் நாடகங்கள், பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள், திராவிடப் பண்ணைப் படைப்புகள் , மார்க்சியப் படைப்புகள் என்றே எம் வாசிப்பின் பரிணாம வளர்ச்சி அமைந்திருந்தது.   இலங்கைத் தமிழர்களின் அரசியலில் திமுகவினரின் ஆதிக்கம் பலமாக இருந்தது.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் திமுகவினரின் கருத்துகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அதன் விளைவாக அண்ணா பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டன்.  யாழ் பொதுசன நூலகத்தை அடுத்து நான் அதிகம் பத்திரிகைகள் , சஞ்சிகைகளை வாசிக்கப் பாவித்த நூலகம் அண்ணா அறிவகம். மனோஹரா தியேட்டருக்கு அண்மையில் , கே.கே.எஸ் வீதியில் அமைந்திருந்தது.  அந்நூலகம் ஆரம்பித்த நாள் இன்னும் நினைவிலுள்ளது. அதனை ஆரம்பித்து வண்ணை ஆனந்தன் உரையாற்றினார். அதுவும் நினைவிலுள்ளது.

தமிழர்களின் வரலாற்றில் திராவிடக்கட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு.  இன்றொரு கூட்டம் திராவிடத்தைத்  தமிழிலிருந்து வேறுபடுத்தி, வரலாற்றைத்திரிக்கும் அல்லது மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.   இவ்விதம் இயங்கும் பலர்ட் நம்புவது சமூக ஊடகங்களில் இயங்கும் போலி அரசியல் ஆய்வாளர்களையே. இவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். திராவிடக்  கட்சிகளூரு வளர்ந்தவர்கள் அவர்கள், அவ்விதம் வளர்ந்தவர்களின் குழந்தைகள் அவர்கள்.

ஆட்சியிலிருக்கும் அரசினை எதிர்கக் வேண்டுமென்றால் அவ்வரசின் தவறுகளை அடிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்யுங்கள். தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த அரசியல் ஆளுமைகளை, அவர்கள் தம்  மக்கள் முன்னேற்றக் கோட்பாடுகளை அசிங்கப்படுத்தாதீர்கள்.

அறிஞர் அண்ணாவின் பின்வரும் நூல்களை ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்.

1. ஏ தாழ்ந்த தமிழகமே -  https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZI9#book1/

2. கம்பரசம் -  https://www.annavinpadaippugal.info/katturaigal/kambarasam_1.htm

3. ஆரிய மாயை - https://www.annavinpadaippugal.info/katturaigal/aariyamaayai.htm

4. அண்ணா கட்டுரைகள் - https://www.annavinpadaippugal.info/annavin_katturaigal.htm



No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்