Friday, February 28, 2025

அலெக்சாந்தர் புஷ்கினின் 'காப்டன் மகள்'


அலெக்சாந்தர் புஷ்கின் (அல்லது அலெக்சாந்தர் பூஷ்கின்) நவீன ருஷிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.  கவிதை, நாடகம், நாவலென இலக்கியத்தில் கால் பதித்தவர்.  இவரது புகழ்பெற்ற நாவலான 'காப்டன் மகள்'  இவரது கடைசி நாவல். இதனை ராதுகா பதிப்பகம், மாஸ்கோ நா.தரமராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பிலும் 'காப்டன் மகள்'என்னும் பெயரில் கவிதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இங்கு நான் பகிர்ந்து கொள்வது இணையக் காப்பகத்திலுள்ளது. நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியானது.நாவலைப் படிக்க - https://archive.org/details/alexander-pushkin-the-captains-daughter-in-tamil-raduga-1985/page/n3/mode/2up?view=theater


எண்பதுகளின் ஆரம்பத்தில் கொழும்பு  கம்பனித்தெருவில் அமைந்திருந்த மார்க்சிய நூல்களை விற்கும் புத்தகக் கடையொன்றில் வாங்கிப்படித்த நூலொன்றில் புஷ்கின் பற்றிய ஆங்கில நூலொன்றுமொன்று.  அதிலிருந்த அவரது காதல் பற்றிய ஆங்கிலக் கவிதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்பினை அல்லது அக்கவிதையினைத் தழுவலை என் குறிப்பேடொன்றில், (29 யூன் 1983)   எழுதி வைத்திருக்கின்றேன்.

நான் முதன் முதலில் புஷ்கினைப்பற்றி அறிந்து கொண்டது அப்போதுதான்.  I Loved You என்னும் தலைப்பில் அவரது காதல் பற்றிய கவிதையொன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுதான் என் இந்தத்தமிழ்த்  தழுவல் அல்லது மொழிபெயர்ப்பு.  இவ்விதம் நான் கூறுவதற்குக் காரணம் - எனக்கு இன்னும்  நான் வாசித்த அந்த நூலிலிருந்த்  புஷ்கினின் காதல் பற்றிய கவிதையின் நூறு வீத மொழி பெயர்ப்பா அல்லது தழுவலா எனது இக்கவிதை என்பது தெரியாது. அதற்கு எனக்கு அந்த நூலை மீண்டும் பார்க்க வேண்டும். அந்த நூலின் தலைப்பும் நினைவிலில்லை. தற்போது என்னிடமிருப்பது என் குறிப்பேடும், அதிலுள்ள இந்தக் கவிதையும்தாம்.

எனது குறிப்பேட்டுப்புத்தகத்திலிருந்து (-ருஷ்யக் கவிஞர் புஷ்கினின் காதல் கவிதையொன்று

இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. -

நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்... இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதகத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.

- 29 யூன் 1983

No comments:

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்