Wednesday, July 9, 2025

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!




{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
 
Worldcat, முகநூல், யு டியூப், இணையத்தளம், டொமைன், அவரிடம் விற்பனைக்காக இருக்கும் நூல்கள் என உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது.
 
உரையாடலின் முடிவில் எழுத்தாளர் தேவகாந்தன் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் மனத்தில் ஒலிக்கின்றன. 'தன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர் தேவகாந்தன்' என்று உண்மையிலேயே ஆழ்மனத்திலிருந்து அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை என் நெஞ்சைத் தொட்டது.

Tuesday, July 8, 2025

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


 


யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

 

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

Saturday, July 5, 2025

மேலும் பல புதிய ஆக்கங்களுடன் பதிவுகள் இணைய இதழ்!


2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்க்கொண்டு வெளியாகும் இணைய இதழ் பதிவுகள்.  பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com ,  https://www.pathivukal.com ஆகிய இணையத்தள  முகவரிகளில் வாசிக்கலாம். படைப்புகளை , ஆக்கபூர்வமான கருத்துகளை ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.

Wednesday, July 2, 2025

நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!

இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான்.



இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம்  மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும்.  வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்'  இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர். 

Tuesday, July 1, 2025

புகலிட அன்னையே! நீ வாழ்க! (இசை - Suno AI & ஓவியம் - AI)


இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்!

புகலிட அன்னையே! நீ வாழ்க!  

பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க நீ!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.

புகலிடம் அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -



பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.



Saturday, June 28, 2025

எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கையிலிருந்து  வெளியான சிறந்த தமிழ்ச் சிறுகதைகளிலும் ஒன்று என்று கூறலாம். இந்தச் சிறுகதை இலங்கையின் போர்ச்சூழலின் முக்கிய காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் அதே சமயம் ,  போர்ச்சூழலில் குடும்பங்களின் அலைதல்கள், அவை ஏற்படுத்திய மன உளைச்சல்கள், அமைப்பையே மாற்றிவிடும் உத்வேகத்துடன் எழுந்த இளையவர்கள்தம் கனவுகளின் சிதைவுகள், காரணமான அவர்களுக்கிடையிலான உள் முரண்பாடுகள்,  நண்பர்களின்  இழப்புகள், பிரிதல்கள்  என்பவற்றையெல்லாம் இந்த ஒரு சிறுகதை எடுத்தியம்புகின்றது.

 - எஸ்.கே.விக்னேஸ்வரன் -

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...