Wednesday, July 9, 2025

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!




{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
 
Worldcat, முகநூல், யு டியூப், இணையத்தளம், டொமைன், அவரிடம் விற்பனைக்காக இருக்கும் நூல்கள் என உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது.
 
உரையாடலின் முடிவில் எழுத்தாளர் தேவகாந்தன் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் மனத்தில் ஒலிக்கின்றன. 'தன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர் தேவகாந்தன்' என்று உண்மையிலேயே ஆழ்மனத்திலிருந்து அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை என் நெஞ்சைத் தொட்டது.
 
இறுதியாக அவரிடமிருந்து 'சிறுமைகளும் அவமதிப்புகளும்' , 'கத்தி', 'கும்பல்' ஆகிய மொழிபெயர்ப்பு நாவல்கள், அ.இரவியின் 'பம்பாய் சைக்கிள்' நாவல் ஆகியவற்றை வாங்கி விடை பெற்றேன்.
 
உண்மையைக் கூறினால், நான் காலம் செல்வத்தைக் கூட்டங்களில் சந்தித்திருக்கின்றேன். ஏனையோருடன் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இதுதான் முதல் முறையாக நானும் அவரும் தனித்துச் சந்தித்து உரையாடியது என்பதும் நேற்றைய சந்திப்பின் இன்னுமொரு முக்கிய அம்சம்.

No comments:

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!

{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் ...

பிரபலமான பதிவுகள்