Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ? _ https://www.youtube.com/watch?v=dBQRr5GT75Q&list=RDdBQRr5GT75Q&start_radio=1

தொட்டால் பூ மலரும் - https://www.youtube.com/watch?v=X_1GRNRAUe4&list=RDX_1GRNRAUe4&start_radio=1

என்னை மறந்ததேன் தென்றலே? - https://www.youtube.com/watch?v=sL2n5IXxDqM&list=RDsL2n5IXxDqM&start_radio=1

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - https://www.youtube.com/watch?v=dBuAD62LTxA&list=RDdBuAD62LTxA&start_radio=1

பொன்னெழில் பூத்தது - https://www.youtube.com/watch?v=VHdiqGwcMNE&list=RDVHdiqGwcMNE&start_radio=1

பால் வண்ணம் பருவம் கண்டு - https://www.youtube.com/watch?v=nxXr6d_LsZ4&list=RDnxXr6d_LsZ4&start_radio=1

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன் - https://www.youtube.com/watch?v=KwxX4yb8i9E&list=RDKwxX4yb8i9E&start_radio=1

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து - https://www.youtube.com/watch?v=DrT6mp2B9PY&list=RDDrT6mp2B9PY&start_radio=1

ஒரு பெண்ணைப் பார்த்து - https://www.youtube.com/watch?v=RfhgYO1GrKA&list=RDRfhgYO1GrKA&start_radio=1

காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் - https://www.youtube.com/watch?v=0xyhhy3NaWI&list=RD0xyhhy3NaWI&start_radio=1

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் - https://www.youtube.com/watch?v=ndvucTxXwhA&list=RDndvucTxXwhA&start_radio=1

உன்னை ஒன்று கேட்பேன் - https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0&list=RDONHG8_zF9K0&start_radio=1

தனிமையிலே இனிமை காண முடியுமா? - https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs&list=RDwzLxlNeWVPs&start_radio=1

நான் பேச நினைப்பதெல்லாம் - https://www.youtube.com/watch?v=vTqTywNxW58&list=RDvTqTywNxW58&start_radio=1

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே - https://www.youtube.com/watch?v=5JaQI3m9Mgo&list=RD5JaQI3m9Mgo&start_radio=1

பாட்டுக்குப் பாட்டெடுத்து - https://www.youtube.com/watch?v=eY-KOYf2GfE&list=RDeY-KOYf2GfE&start_radio=1

என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து - https://www.youtube.com/watch?v=WPN8qBS-_w8&list=RDWPN8qBS-_w8&start_radio=1

சக்கரைக்கட்டி ராஜாத்தி - https://www.youtube.com/watch?v=XwE9XgS2PZI&list=RDXwE9XgS2PZI&start_radio=1

என்னருகே நீ இருந்தால் - https://www.youtube.com/watch?v=tB2W7njDDAc&list=RDtB2W7njDDAc&start_radio=1

அன்று வந்ததும் இதே நிலா - https://www.youtube.com/watch?v=Ns6jhsVbUqY&list=RDNs6jhsVbUqY&start_radio=1

அன்றொரு நாள் இதே நிலவில் - https://www.youtube.com/watch?v=c1R74GGjTOo&list=RDc1R74GGjTOo&start_radio=1

கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ - https://www.youtube.com/watch?v=SirI_7__llg&list=RDSirI_7__llg&start_radio=1
 

என் நாளும் வாழ்விலே கண்ணான காதலே - https://www.youtube.com/watch?v=E3aMU6-5m6o&list=RDE3aMU6-5m6o&start_radio=1

உன்னைக் கண்டு நான் ஆட , என்னைக் கண்டு நீ ஆட - https://www.youtube.com/watch?v=dLC_5P_rtTw&list=RDdLC_5P_rtTw&start_radio=1

வாடிககை மறந்ததும் ஏனோ - https://www.youtube.com/watch?v=4O-9rWtytdQ&list=RDdLC_5P_rtTw&index=3

No comments:

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!

நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள்....

பிரபலமான பதிவுகள்